சேலம், ஜூன் 26- சேலம் மாவட்ட கழகச் செயலாளர் சி. பூபதி தலை மையில் 25.6.2024 அன்று மாலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை “நீட் “ஒழிப்பு இரு சக்கர வாகன பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டத்திற்கான பிரச்சாரம் நன்கொடை திரட்டல் பணி தொடங் கியது.
சேலம் மாநகர் தலைவர் அரங்க இளவரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜி, சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம், செயலாளர் போலீஸ் ராஜி, தாதகாப்பட்டி பகுதி செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட தோழர்கள் சேலம் ஜங்ஷன் பகுதியில் வணிக நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள், மற்றும் பொதுமக்களிடம் நிகழ்ச்சி குறித்த துண்டறிக்கைகள் வழங்கினர். “நீட்” என்னும் சூழ்ச்சியை விளக்கி நிகழ்ச் சிக்கு அழைப்பு விடுத்து நன்கொடை திரட்டினர்.
பொதுமக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. 25.6.2024 அன்று மாலை நன்கொடை திரட்டல் ரூபாய்- 3320.
சேலத்தில் நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பரப்புரை பயண சங்கமம் ஏற்பாடுகளில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
Leave a Comment