2 ஆண்டுகளில் 10 ஆயி­ரம் கிலோ மீட்­டர் சாலைகள் மேம்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 26- 10 ஆயி­ரம் கிலோ மீட்­டர் ஊராட்சி மற்­றும் ஊராட்சி ஒன்­றி­யச் சாலை­கள் இரண்டு ஆண்­டு­­களில் மேம்­ப­டுத்­தப்­ப­டும் என்ற முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலி­ன் அவர்களின் அறி­விப்­புக்கு மேனாள் ஒன்­றிய அமைச்­சர் ப.சிதம்­ப­ரம் வர­வேற்பு தெரி­வித்­துள்­ளார்.
இது­கு­றித்து ப.சிதம்­ப­ரம் வெளி­யிட்­டுள்ள சமூ­க­வ­லைத்­த­ளப் பதி­வில்,
10 ஆயி­ரம் கிலோ மீட்­டர் ஊராட்சி மற்­றும் ஊராட்சி ஒன்­றி­யச் சாலை­கள் இரண்டு ஆண்­டு­­களில் மேம்­ப­டுத்­தப்­ப­டும் என்று அறி­வித்த முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலி­ன் அவர்களுக்கு நன்­றி­யை­யும், பாராட்­டுக்­க­ளை­யும் தெரி­வித்­துக் ­கொள்­கி­றேன் என்று பதி­விட்­டுள்­ளார்.
கிரா­மங்­க­ளில் வாழும் மக்­கள் இந்­தத் திட்­டத்­தால் பெரும் பய­ன­டை­வார்­கள் என்று தெரி­வித்­துள்ள ப.சிதம்­ப­ரம், சாலை­கள் மேம்­பட்­டால் கல்வி, வர்த்­த­கம், தொழில் முன்­னேற்­றம் உள்­ளிட்­டவை ஏற்­ப­டும் என்­பது உல­கம் முழு­வ­தும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட உண்மை என்று தெரி­வித்­துள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *