சென்னை, நவ.19 எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு சிண்டிகேட் உறுப்பினராக இருந்து ஆதரவு தெரிவித்தேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ஆளுநருக்கு சட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்புவது தொடர்பான முதலமைச்சரின் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நேற்று (18.11.2023) சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிசாமி, பல்கலை. வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா குறித்தும் பேசினர்.
அவர் பேசியதாவது: 1994 ஜனவரி மாதம் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பல் கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிறகு திமுக ஆட்சியில் அந்தச் சட்டம் கை விடப்பட்டது. அப்போது அமைச்ச ராக இருந்த க.அன்பழகன் பல்கலைக் கழக வேந்தராக முதலமைச்சர் இருப் பது தொடர்பாக அதிமுக ஆட்சியில் கொண்டு வந்துள்ள சட்டம் ஜனநா யகத்துக்கு உகந்த நோக்கம் அல்ல என்று கூறினார். இப்போது நீங்களே சட்ட மசோதா கொண்டு வந்துள் ளீர்கள்.
அவை முன்னவர் துரைமுருகன்: சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் (ஆட்சி மன்றக்குழு) உறுப்பினராக
8 ஆண்டுகள் இருந்துள்ளேன். அப்போ தெல்லாம் முதலமைச்சரோடு கலந்து பேசி, முதலமைச்சர் யாரை கூறுகி றாரோ அதனடிப்படையில் பல்கலை. வேந்தரை ஆளுநர் நியமிப்பார். இது தான் முறை. இப்போது சிண்டிகேட், செனட் இரண்டும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றினாலும், என்.சங்கரய் யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்ப தற்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று ஆளுநர் கூறுவது சர்வாதிகாரம்.
சென்னை பல்கலைக்கழகத்தால் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. சிண்டிகேட் உறுப்பினராக நான் இருந்தேன். நான் எதிர்த்தால் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது. ஆனால், டாக்டர் பட்டத்துக்கு எம்.ஜி.ஆர் பொருத்தமானவர் என்று கூறி, என்னை கருணாநிதி ஆதரிக்கக் கூறி னார். அதனால், சிண்டிகேட் உறுப் பினர் கூறினால், ஏற்க வேண்டும். தற்போதைய ஆளுநர் சிண்டிகேட் உறுப்பினர் கூறினாலும் ஏற்பது இல்லை.
எடப்பாடி பழனிசாமி: அவை முன்னவர் (துரைமுருகன்) சாதுர்யமாக பதில் கூறுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அவை முன்னவர் சாதுர்யமாகப் பேச வில்லை. உண்மையாகப் பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: இது போன்ற நிலையெல்லாம் மாற்ற வேண் டும் என்பதற்காகத்தான் அப்போதே, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச் சர் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கைவிடப்பட்டது.
முதலமைச்சர் அப்போதெல்லாம் துணை வேந்தர் நியமனம் அரசின் பரிசீலனையின் பேரில் நடைபெற்றது. இப்போது அது நடைமுறையில் இல்லை. அதனால்தான் இந்த சட்டமசோ தாவைக் கொண்டு வந்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி: அப்போதும் நடைமுறையில் இல்லை. அதனால் தான், அந்தச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.
துரைமுருகன் : 3 துணைவேந்தர்களை சிண்டிகேட் உறுப்பினராக இருந்து நானே தெரிவு செய்துள்ளேன். அதன் நடைமுறை எனக்குத் தெரியும்.