பத்தாண்டுகள் உறங்கிக் கிடந்த பிற்படுத்தப்பட்டோரின் உரிமைச் சாசனமான மண்டல் குழு பரிந்துரைக்கு, புத்துயிர் அளித்து, ஒன்றிய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27% இட ஒதுக்கீடு ஆணைப் பிறப்பித்தார். அதற்கான விலையாக பிரதமர் பதவியையும் துறந்த மாமனிதர்.
”ஆயிரம் ஆண்டு பழைமை நிறைந்த முறையை எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்திடும்போது, நாங்கள் சிக்கலுக்கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.”
இது, 1990-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி, அன்றைய பிரதமர் வி.பி.சிங், தனது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது நடந்த விவாதத்தில் மக்களைவையில் கூறியவை.
வி.பி.சிங் எந்த மக்களின் உரிமைக்காக பிரதமர் பதவியையும் துச்சமென தூக்கி எறிந்து, இறுதிவரைப் போராடினாரோ, அந்த மக்கள் அவரை நன்றியோடு கொண்டாடவேண்டியது அவர்கள் தம் கடமை.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில், சமூகநீதிக் காவலருக்கு அவரது பிறந்த நாளில் நாம் கொண்டாடுவதும், அவருடைய புகழைப் பாடுவதும் இயல்பே.
வாழ்க வி.பி.சிங்; வெல்க சமூக நீதி.
– கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர், அகில இந்திய
பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
குப்புற விழுந்த கடவுள்
தேர் சாய்ந்து தொழிலாளி பலி
அறந்தாங்கி, ஜூன் 25- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று (24.6.2024) நடைபெறுவதாக இருந்தது. அதற்கான பணியில் கிராம மக்கள் மும்முரமாக இருந்தனர்.
திருவிழாவிற்காக தேரை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த ஊரைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் மகாலிங்கம் என்பவர் மீது தேர் சாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழப்பு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது பக்தர்களாக இருந்தாலும் சரி மனிதநேயத்துடன் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் இன்னொன்றையும் நினைவுப்படுத்த வேண்டி இருக்கிறது. காவல்துறை யார் மீது வழக்கு பதிவு செய்வது? இந்த விபத்துக்கு காரணமான முத்துமாரியம்மன் மீதா? அறியாமையில் இருக்கும் ஊர் மக்கள் மீதா?
இந்த அவலம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இறந்தவரைக் கொண்டு வந்து அடக்கம் செய்துவிட்டு மீண்டும் அடுத்த நாள் திருவிழாவிற்கு அந்த கிராம மக்கள் தயாராக இருப்பது தான் வேதனையாக உள்ளது.