சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்த வீடுகள் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பயங்கரம்

Viduthalai
2 Min Read

அரசியல்

புதுடில்லி, ஆக. 26 –  இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவால் பல வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.

நிலச்சரிவினால் கட்டடங்கள் அட்டை வீடுகள் போல சரிந்து விழும் காட்சிப் பதிவுகள் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளன. இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இதுகுறித்து மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தனது எக்ஸ் (ட்விட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், 

“பயங்கரமான நிலச்சரிவின் காரணமாக, குலு மாவட்டம், அன்னி பகுதியில் இருந்து வணிக கட்டடம் இடிந்து விழும் மனதை நெருடச்செய்யும் காட்சிகள் உலா வருகின்றன. இந்த பாதிப்பினை முன்னரே கணித்து மாவட்ட நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு முன்பே கட்டடங்களில் இருந்தவர் களை காலி செய்யச் செய்தது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

குலுவில் பெய்துவரும் கன மழை காரணமாக குலு – மண்டி சாலை சேதமடைந்துள்ளதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக் கான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய குலுவின் மூத்த காவல்துறை அதிகாரி சாக்‌சி வர்மா, “குலுவையும் மண்டியையும் இணைக்கும் சாலை சேதமடைந் துள்ளது. மாற்றுப் பாதையான பான்டோ சாலையும் சேதமடைந்துள்ளது.

இதனால் அங்கு தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட் டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக அம்மா நிலம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது.

முன்னதாக, இந்த பாதிப்புகளை மாநில பேரிடராக மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும் சேதங் களைக் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அரசு தொடங்கி யுள்ளது. இமாச்சலில் ஜூன் 24ஆம் தேதி பருவ மழை தொடங் கியது முதல் தற்போது பெய்துவரும் மழை பாதிப்புகள் வரை மாநிலத் தின் உள்கட்டமைப்பு சேதமதிப்பு ரூ.8,014.61 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசுத் தகவலின் படி, எதிர்பாராத மழை காரணமாக மாநிலத்தில் 2,022 வீடுகள் முழுமை யாகவும், 9,615 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 

113 நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் ஆயி ரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். உள்கட்ட மைப்பு வசதிகள் வெகுவாக சேதமடைந்துள்ளன. இந்த பருவ மழையால் 224 பேரும், மழை தொடர்பான விபத்துகளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *