ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது 4 கோடி பெண்கள் பிரசவத்தால் ஏற்படும் நீண்டகால உடல் நலப் பிரச்சினையை சந்திக்க நேரும் என்று தி லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னலில் புதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரசவத்திற்கு பிறகு 35 சதவீத பெண்கள் உறவின் போது அல்லது உறவுக்கு பிறகு நீண்டகால தொடர் பிறப்புறுப்பு வலியாலும், 32 சதவீத பெண்கள் நீண்ட கால முதுகு வலியாலும் பாதிக்கப்பட்டுள்ள னர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் உலக சுகாதார அமைப்பின் பன் னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வில் குழந்தை பிறப்பிற்கு பிறகு விருப்பமற்ற நிலையிலும் சிறுநீர் கழித்தல் பிரச்சினை யால் 8-31 சதவீத பெண் களும், தொடர் கவலையால் 9-24 சதவீத மும், மனச்சோர்வால் 11-17 சதவீதமும், பெரினி யல் வலியால் 11 சதவீத பெண்களும் பாதிக்கப் பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
குழந்தை பிறப்பிற்கு பின் இது போன்ற பிரச்சி னைகளில் வருடக்கணக்கில் பெண்கள் துன்பத்தை சந்தித்துள்ளதாக இந்த ஆய்வுக் கட்டுரை காட்டுகிறது.இது போன்ற மருத்துவ பிரச்சினைகள் எழும் போது அதற்கான மருத்துவ சேவை களை அணுக இயலாத நிலையிலேயே பெண்கள் உள்ளனர் என்றும் பெண்களின் இந்த நீண்ட கால பிரச்சினைகளை சரி செய்ய சுகாதார அமைப்புக்குள் தீவிரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் மட்டுமே பிரசவ காலம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பிறகு பெண்களுக்கு முழு கவனிப்பு கொடுத்து இந்த ஆபத்துகளை முன்பே கண்டறிந்து நீண்டகால உடல்நல பிரச்சினைகளாக மாறுவதற்கு முன் தவிர்க்க இயலும் என்றும் குறிப் பிட்டுள்ளனர்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் குழந்தை பிறப்பிற்கு பின் அல்லது கர்ப்பிணி பெண்களின் சுகாதார நலனை பேணு வதில் மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக அதிக வருமானம் கொண்ட நாடுகளை விட அதிக பொருளாதார பிரச்சினைகளை கொண்ட நாடுக ளில் கர்ப்ப மற்றும் பிரசவ காலத்தில் பெண்களின் இறப்பு விகித நிலைமை மோசமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆய்வின் போது பல நாடுகளால் பெண்கள் எதிர்கொள்ளும் இந்த நீண்டகால பிரச்சினை களுக்கு,உயர்தர சிகிச்சைக்கான வழி காட்டுதல் எதுவும் சமீபத்திய ஆண்டுகளில் முறையாக வெளி யாகவில்லை அல்லது உருவாக்கப்படவில்லை என்றும் குறிப்பாக குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாட்டில் இது போன்ற எந்த வழிகாட்டுதல்களும் இல்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அவை பெரும்பாலும் குறைவாகவே மதிப்பிடப்பட்டு, குறைவா கவே அங்கீகரிக்கப்பட்டு, குறைவாகவே பொது வெளியில் தெரிவிக்கப் படுகின்றன” என உலக சுகாதார நிறுவனத்தின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் பாஸ்கேல் அலோடே தெரிவித்துள்ளார்.