உசிலம்பட்டி மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை, ஒரு ’விடுதலை’ சந்தாவையும், தாம்பரம் சா.பார்த்திபன் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சந்தாவையும், சட்டக் கல்லூரி மாணவரும், மாநில மாணவர் கழக துணை அமைப்பாளருமான எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் ஒரு விடுதலை சந்தாவையும், திருவொற்றியூர் மாவட்டத்தை சேர்ந்த சா.கிருஷ்ணன் மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று உள்ளார் – அவர் ஒரு விடுதலை சந்தாவையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
அதியமான் அரண்மனை உரிமையாளர் சத்திய பிரபு கோவேந்தன் விடுதலை அய்ந்து சந்தா தொகை ரூபாய் 10,000/-மும், ஓசூர் கிரீன்வேலி மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் கல்வி தாளாளர் ஆர். ராஜா விடுதலை அய்ந்து சந்தா தொகை ரூபாய் 10,000/-மும், ஆசிரியர் அருட்செல்வி சேவியர் செல்வநாதன், ஒரு விடுதலை சந்தாவையும், நல்லம்பள்ளி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் தலைமை ஆசிரியர் நா.பெருமாள், 2 விடுதலை சந்தாவையும், ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் வழங்கினர்.
காரணாம்பட்டு க.பாலசுப்பிரமணி (வனச்சரக அலுவலர், பணிநிறைவு) ஒரு விடுதலை சந்தாவை பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும வீரமணியிடம் வழங்கினார்.