சென்னை, ஜூன் 18- நாட்டின் பால் உற்பத்தியில் தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே வாடிக்கையாளர்களுக்கு பால் அட்டை மூலம் குறைந்த விலையில் பால் விநியோகம் செய்யப்படு கிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பால் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.5 விழுக் காடு இதுதொடர்பாக. தமிழ்நாடு அரசு நேற்று (17.6.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலகளவில் அதிக அளவி லான பால் உற்பத்தியில் இந் தியா முன்னணி நாடாக திக ழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது கிராம அளவில் மொத்தம் 10,814 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான முறையிலும் நேர்த்தியான முறையிலும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பால் வளத் துறையை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு திட்டங்கள் திறம்படசெயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இயங்கிவரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக நாள்தோறும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நாளொன்றுக்கு 35.67 லட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 லட்சம் லிட்டர் பால்உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்ததுபோக,31.67 லட்சம் லிட்டர் பால் 27 மாவட்டகூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஊக்கத் தொகை:
பால் கொள் முதலை அதிகரிக்கும் வகையி்ல் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 2023ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமை பால் லிட்டர் ஒன் றுக்கு ரூ.3 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான காலத்துக்கு ரூ.108.30 கோடிஊக்கத் தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங் கப்பட்டுள்ளது.
2023-2024ஆம் ஆண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் மின்னணு மற்றும் இணையவழி வணிகம்மூலம் சுமார் ரூ.30.19 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கூட்டுறவு பால் பண்ணைகளின் இணையம் மூலம் 2021-2022ஆம் ஆண்டு ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருள்களை மின்னணு மூலமாக ரூ.590 கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதற்காக ஆவின் நிறுவனத்துக்கு இந்திய அளவில் இரண்டாமிடத்துக்கான விருது வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.