சென்னை, ஜூன் 15- இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 11,000 போ் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம், பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.எச்.), 4 ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன.
இந்த நிலையில், பி.வி.எஸ்சி. – ஏ.எச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2024 – 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது.
ஜூன் 21-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோருக்கான இடங்க ளுக்கு ஜூலை 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட் டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு பி.வி.எஸ்சி. – ஏ.எச். படிப்பில் 45 இடங்களும், பி.டெக். படிப்புகளில் 8 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பி.வி.எஸ்சி. – ஏ.எச் படிப்புக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும்.
இதுவரை பி.வி.எஸ்சி. – ஏ.எச். படிப்புக்கு 9,100 பேரும், பி.டெக். படிப்புகளுக்கு 1,900 பேரும் என மொத்தம் 11,000 மாணவா்கள் விண் ணப்பித்திருப்பதாக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.