சென்னை, ஜூன் 12-தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (11.06.2024) சென்னை, கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மய்யத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையினை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மருத்துவமனை சேவை
இந்தியாவின் முதல் பிரத்யேக மூத்தோருக்கான மருத்துவமனை பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி டில்லி யில் இருந்து காணொலிி வாயிலாக பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இம்மருத்துவமனையைப் பொறுத்தவரை ஒன்றிய அரசின் மருத்துவத்துறை சார்பில் இரண்டு இடங்களில் தேசிய நல மருத்துவ மய்யம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒன்று டில்லியிலும், மற்றொன்று தமிழ்நாட்டிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள தேசிய முதியோர் நல மருத் துவமனை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட வளாகத்தில் இயங்கி வருகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 8.64 ஏக்கர் பரப்பளவில் 3,76,358 சதுர அடி பரப் பளவில் பிரத்யேகமான மருத்துவமனை அமைக் கப்பட்டு கடந்த பிப்ர வரி மாதம் திறந்து வைக்கப் பட்டது.
இம்மருத்துவமனையைப் பொறுத்தவரை 200 படுக்கை வசதிகள், 40 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 20 கட்டணப்படுக்கைகள் இம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த நிதிநிலை அறிக்கையில் மாவட்ட அரசு தலைமை மருத்து வமனைகளிலும் கட்டணப் படுக்கைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டணப் படுக்கைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் அரசின் மருத்துவ சேவைகளை பெற தொடங்கி இருப் பதால் கட்டணப் படுக்கை களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது.
அந்தவகையில் மூத்தோ ருக்கான மருத்துவமனையைப் பொறுத்தவரை, கட்டணம் அதிகமாக இருக்கக்கூடாது என்கின்ற வகையில் ஏழை, எளியவர்கள் கட்டணப் படுக்கை அறைகளை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக ஒரு அறைக்கு ரூ.900/- என்கின்ற வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உணவு வசதிகளுடன் சேர்த்து இக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மிக மலிவான கட்டணத் தில் அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இச்சேவையினை பொது மக்கள் மிகச் சிறப்பான வகையில் பயன்படுத்தி வருகிறார்கள். இச்சேவை தொடங்கப்பட்டு இது வரை சிகிச்சைப் பெற்ற புறநோயாளிகளின் எண் ணிக்கை 37,811 பேர், உள்நோயாளிகளின் எண்ணிக்கை 1,198 பேர், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து குணமடைந்து சிகிச்சைப் பெற்று திரும் பிச் சென்றவர்களின் எண் ணிக்கை 985 பேர், இதுவரை இம்மருத்துவமனையில் 220 அறுவை சிகிச்சைகள் நடைபெற்று இருக்கிறது.
1,046 சிடி ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. 761 இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 10,155 பேருக்கு பிசியோதெரபி செய்யப்பட்டிருக்கிறது. இதில் மனநல சிகிச் சையில் 393 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
இம்மருத்துவமனையைப் பொறுத்தவரை ரூ.1 கோடி மதிப்பிலான (Essential Drugs) அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இருக்கின்றது. மேலும் இம்மருத்துவமனையில் முதியோர்கள் புத்தகங்கள் வாசிப்பதற்கு புதிய நூலகம் திறந்து வைக் கப்பட்டிருக்கிறது.
அதேபோல் முதியோர் கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதுவாக கேரம்போர்டு, சதுரங்கம், பல்லாங்குழி போன்ற விளையாட்டு உபகரணங்களும் வாங்கித் தரப்பட்டு அவர்களும் அதன்மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
இயற்கை மருத்துவ சேவை தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் வழி காட்டுதலின்படி, இம்மருத்து வமனையில் இயற்கை மருத்துவப் பிரிவு திறந்து வைத்திருக்கிறோம்.
உடல்சார்ந்த பயிற்சி என்பது அனைத்து வயதினருக்கும் பயன் பெறக் கூடிய ஒன்று. அந்தப் பயிற்சி குறிப்பாக முதியோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்ற காரணத்தினால் இயற்கை மருத்துவப் பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இதில் பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில் மசாஜ் சிகிச்சை, நீராவிக்குளியல், வாழை இலைக் குளியல், மண் குளியல், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, நீர் சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், நறுமணச் சிசிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் போன்ற சிகிச்சைகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
உடலையும், உள் உறுப்புகளையும் வளம் பெறச் செய்வதற்கும், புத்துணர்ச்சி அடைய செய்வதற்கும் இதுபோன்ற சிகிச்சை முறைகள் ஏதுவாக இருக்கும். முதியோர்களுக்கு பொதுவாக கோபம் அதிகரித்தல், பயம் அதிகரித்தல் போன்றவை இருக்கும்.
கோபமும், பயமும் அதிகரிக்காமல் அவர்களை சாந்த நிலையில் வைத்துக் கொள்வதற்கு இந்தப் பயிற்சிகள் அவர்களுக்கு உதவியாக இருக்கும். வயதில் மூத்தவர்களுக்கு தசைகள் இறுக்கம் அடைந்து விடும். இறுக்கம் அடையும் தசைகளை தளர்வடையச் செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு தசைகளின் இறுக்கங்களை தளர்வடையச் செய்யும் சிகிச்சைகளும் தற்போது செய்யப்பட உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர் கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் சங்குமணி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் தேரணிராஜன், தேசிய முதியோர் நல மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தீபா, கலைஞர் நூற்றாண்டு பன் னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் பார்த்தசாரதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இணை இயக்குநர் மருத் துவர் மணவாளன், மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ் ணமூர்த்தி, துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவப் பேராசிரியர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய திராவிட மாடல் ஆட்சியில் முதியோர் நலம் மருத்துவமனையின் சிறப்பான முறையில் இயங்கும் செய்தியினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு மிகு மா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கியது சிறப்பான செய்தியாகும் இந்த மருத்துவ மனை.முதியோர் களுக்குஓர் வரப்பிரசாதம் ஆகும்.தமிழக அரசுக்கு நன்றி.