கொல்கத்தா, ஜூன்10- குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (9.6.2024) நடந்த பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு திரிணாமுல் காங்கிர சுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த கட்சி இந்த விழாவை புறக்கணித்தது.
இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள சுதிப் பந்தோபாத்யாய் கூறு கையில், ‘புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பா.ஜனதா தலைவர் பிரகலாத் ஜோஷி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். ஆனால் அதில் பங் கேற்பதில்லை என எங்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது’ எனக் கூறினார்.
முன்னதாக கட்சி யின் தலைவரும், முதலமைச்சருமான மம்தாவும் இந்த விழாவை புறக்கணிப்பதாக நேற்று முன்தினம் (8.6.2024) அறிவித்திருந்தார்.
இது குறித்து அவர், ‘பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு எங்களுக்கு வரவும் இல்லை, அதில் பங்கேற்கவும் மாட்டோம்’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.