சென்னை அய்.அய்.டி.யில் எம்.டி.- பி.எச்டி. படிப்புகள் அறிமுகம்

2 Min Read

சென்னை, நவ. 19- சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகம் (அய்.அய்.டி.), போரூர் சிறீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்.டி.- பி.எச்டி. இரட்டைப் பட்டப் படிப்பு பாடத்திட்டத்தை வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 16.11.2023 அன்று கையொப்ப மானது. இது குறித்து அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகில் உடலியலுக்கான 37 சதவீதம் நோபல் பரிசு பெற்றவர்கள் எம்.டி. – பி.எச்டி. படித்தவர்களாக இருக்கின் றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராமச்சந்திரா நிறுவனத்தில் எம்.டி. முடித்தவர்கள் அய்.அய்.டி.யில் பி.எச்டி. படிக்க விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைக்கு வழிவகுப்பதுடன், இந்தக் கூட்டு முயற்சியால் பல கண்டுபிடிப்புகளுக்கும் வாய்ப்பாக அமை யும். மருத்துவத் துறையில் இந்தியா சுய சார்பு நிலையை அடைந்து அனைவருக்கும் இந்தத் தொழில் நுட்பம் சென்றடைய இது முதல் முயற்சியாக இருக்கும்.

சென்னை அய்.அய்.டி.-யை பொறுத்தவரையில் ஆராய்ச்சி படிப்பைத் தொடரும் மாணவர் – வழிகாட்டி இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. இதற்காக மேனாள் அய்.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் போரூர் சிறீராமச்சந்திரா உயர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர் உமா சேகர், சென்னை அய்அய்டி மருத்துவ அறிவியல், தொழில்நுட்பத் துறை தலைவர் பேராசிரியர் ஜார்ஜ், பேராசிரியர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

மனிலா, நவ. 19- பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெரிய தீவுகளின் கூட்டமான பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் ஆற்றல் மிக்க நிலநடுக்கம் (18.11.2023) ஏற்பட்டது. 

அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மான்டெனா தீவை மய்யமாகக் கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. 

நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பர பரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

பெரியார் பல்கலை. ஆளுநர் நிகழ்ச்சியில் அமைச்சர் பெயர் புறக்கணிப்பு

சேலம், நவ. 19- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22ஆவது பட்டமளிப்பு விழா வரும் 24ஆம் தேதி காலை நடக்கிறது. 

முன்னதாக, 23ஆம் தேதி மாலை பல்கலைக்கழக கூட்ட அரங்கில், ஜி20 மாநாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பேசுகிறார். இந்நிகழ்ச்சிக்கான அழைப்பி தழில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் பெயர் புறக் கணிக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், உயர் கல்வித் துறையின் எந்தவித அனுமதியும் இன்றி, துணை வேந்தர் ஜெகநாதன் தன்னிச் சையாக இந்த விழாவை நடத் துவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் துணைவேந்தருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *