கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

7.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ரூ.30 லட்சம் கோடி பங்குச் சந்தை மோசடி மோடி – அமித்ஷாவுக்கு நேரடி தொடர்பு: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார், ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி கிடைக்குமா? காங்கிரஸ் கேள்வி. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அய்க்கிய ஜனதா தளம் ஆதரவு.
*அக்னி வீர் திட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் குறித்து மறு பரிசீலனை, பாஜக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2024 தேர்தலில் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள. கட்சிக்கு வாக்கு பங்கு 6% அதிகமாகவும், பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தளம் வாக்கு சதவீதம் – தலா 3.5% அல்லது அதற்கு மேல் சரிந்தன.
* 2019 இல் 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற 224 இடங்களிலிருந்து, பாஜக 2024 இல் 156 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
* ‘பாஜகவினர் ராமன் பெயரில் வியாபாரம் செய்தார்கள்’ அயோத்தியில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியின் தாழ்த்தப்பட்டோர் தலைவர் விமர்சனம்.
*2024 தேர்தல் முடிவுகளில், ‘இந்தியா என்ற எண்ணம்’ மறுபிறப்பு ஆகியுள்ளது என்கிறார் பேராசிரியர் அசுதோஷ் வார்ஸ்னே.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*சரத்பவார் – உத்தவ் – காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி (MVA) பெற்றுள்ள 30 இடங்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.பி.யின் ஆதரவைப் பெற்ற மகாராட்டிரா மக்களவை முடிவுகள் மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும்.
* மகாராட்டிராவில் அஜித் பவார் அணியில் இருந்து 10-15 சட்டமன்ற உறுப்பினர்கள், சரத் பவார் அணிக்கு தாவுவார்கள் என தகவல்.
* மகாராட்டிராவைச் சேர்ந்த சுயேட்சை மக்களவை உறுப்பினர் விஷால் பாட்டீல் காங்கிரசில் சேர்ந்தார். மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.
* அண்ணா பல்கலைக்கழகம் முதல் முறையாக உலகின் முதல் 400 சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் இடம் பிடித்தது. பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 427ஆவது இடத்தில் இருந்து 383ஆவது இடத்திற்கு முன்னேறி, இந்திய நிறுவனங்களில் 10ஆவது இடத்தைப் பிடித்தது.
தி டெலிகிராப்:
* கோட்டா: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த 18 வயது சிறுமி 9ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உ.பி.யில் பாஜக சார்பில் போட்டியிட்ட 33 மக்களவை உறுப்பினர்களில் 20 பேர் தோல்வி.
*மகாராட்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகும் முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு. 2025 மாநில தேர்தல் வரை தொடர அறிவுரை.
* அயோத்தி, ஷ்ரவஸ்தி மற்றும் சித்ரகூட் ஆகிய மூன்று கோயில் நகரங்களை பாஜக இழந்தது, மதத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தியதால் “ராமனின் சாபத்தால்” பாஜக இழந்தது என்று காங்கிரஸ் விமர்சனம்.
* மோடி தலைமையிலான அரசு ஜூன் 9 பதவி ஏற்கும் என தகவல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *