அரியலூர், ஜூன் 7- அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் பெரியார் பெருந்தொண்டர் ந. செல்லமுத்து அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 2.6.2024 ஞாயிறு காலை 11 மணியளவில் அரியலூர் வாலாஜா நகரம் எஸ். எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையேற்க ,ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து வரவேற்புரையாற்றினார்.
கழகப் பேச்சாளர் புலவர் நாத்திக நம்பி மறைந்த செல்லமுத்து அவர்களின் படத்தினை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார்.தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட காப்பாளர் சு.மணிவண்ணன் பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மேனாள் மாவட்ட செயலாளர் சா. ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார் வஞ்சினபுரம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் க.தனபால் ஆகியோர் மறைந்த செல்லமுத்துவின் நினைவுகளைப் போற்றி இரங்கலுரையாற்றினர்.
மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் வெ.இளவரசன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன், அரியலூர் நகர தலைவர் துரை.காமராஜ் அரியலூர் நகர அமைப்பாளர் ஆட்டோ தர்மா திருமானூர் ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன், ஒன்றிய தலைவர் க.சிற்றரசு தொழிலாளரணி அமைப்பாளர் சி. கருப்புசாமி மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மறவனூர் மதியழகன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க. மணிகண்டன் வாலாஜா நகரம் வீர பிரபாகரன் குழுமூர் சுப்பராயன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
அவரது மகன்கள்பாண்டியன், வீரமணி மகள் எலிசபெத் ஆகியோர் இயக்கப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்பதாகவும் அவரது தந்தை காட்டிய பெரியார் பாதையில் பயணிக்கவும் உறுதி கூறி நன்றி கூறினர்.அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா இறுதியாக நிகழ்ச்சியில் பங்கேற்று செல்லமுத்து படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அவருடன் அரியலூர் மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.