தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி
சென்னை, ஆக.31 விநாயகர் சிலைகள் செய்வதற்கு பசுமை தீர்ப் பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்து முன்னணியை சேர்ந்த அரசுப் பாண்டி என்பவர், மதுரை உயர்நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட சிலைகள் வைத்து பக் தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயன வண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப் படுகின்றன. இந்த சிலைகள் ஆறு, குளம், கிணறுகளில் கரைக்கப்படுகின்றன. ஆனால், அவை கரைவதில்லை. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. இது உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
இதற்கிடையே, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற பொருட்களால் செய் யப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் கரைவதில்லை என்பதாலும், ரசா யனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்ய அனுமதி இல்லை எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. எனவே, மதுரையில் களிமண் சிலை களை மட்டும் செய்ய அனுமதி அளித்து, அதனை ஆறு, குளத்தில் கரைக்க உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி குமரப்பன் ஆகி யோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, “விநாயகர் சிலையை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப் பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், எவ்வாறு பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படு கின்றன?” என நீதிபதிகள் கேள்வி எழுப் பினர். அத்துடன், விநாயகர் சிலைகள் செய்வதற்கு, பசுமைத் தீர்ப்பாயம், மாசுக் கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித் தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு (31.8.2023) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.