*வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான் முடிந்த மொழி என்பதாக முடிவு செய்ய முடியுமா?
*சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்து தோன்றுவதேயாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்தே தோன்றுவதாகும்.
– தந்தை பெரியார்