பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மாதிரி வினா விடை – 13

2 Min Read
11. “தண்டளிர்ப்பதம்” இச்சொல்லை சரியாக பிரித்திடும்  முறையை தேர்வு செய்:
A) தண் + அளிற் + பதம்
B) தன்மை + தளிர் + பதம்
C) தண்மை + தளிர் + பதம்
D) தண்டளிர் + பதம்
12. கண்டெடுக்கப்பட்டுள்ளன – பிரித்து எழுதுக:
A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
B) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
C) கண்டெடுக்க + பட்டு + உள்ளன
D) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
13. பாகற்காய் – பிரித்தெழுதுக
A) பாகு + அல் + காய்
B) பாகு + அற்காய்
C) பாகற் + காய்
D) பாகு + கல் + காய்
14. தவறான இணை காண்க(பிரித்து எழுதுக)
A) கலம்பகம் = கலம் + அகம்
B) பைந்நிணம் = பசுமை + நிணம்
C) நன்கணியர் = நன்கு + அணியர்
D) தொண்ணூற்றாறு = தொண்ணூறு + ஆறு.
15. “அங்கை” சரியாக பிரிக்கும் முறையை காண்க:
A) அங் + கை
B) அகம் + கை
C) அ+ங்+கை
D) அகம்+க்+ஐ
16. சரியானதை காண்க (பிரித்து எழுதுக)
A) நாத்தொலைவில்லை = நா + தொலைவு + வில்லை
B) பொருட்டன்று = பொருட் + அன்று
C) நடுவிகந்தாம் = நடுவு + இகந்து + ஆம்
D) மைத்தடங்கண் = மை + தடங்+ கண்
17. தவறாக பிரிக்கப்பட்டுள்ள சொல்லை காண்க:
A) இலக்கியம் = இலக்கு + இயம்
B) செம்மொழி = செம்மை + மொழி
C) தமிழ்மொழி = தமிழ் + மொழி
D) வேரூன்றிய = வேரு + ஊன்றிய
18. பின்வருவனவற்றுள் ‘ஈறு போதல்’ ‘இனமிகல்‘   என்னும் விதிகளின்படி புணராதது
A) நெடுங்கடல்
B) செங்கடல்
C) கருங்கடல்
D) கருங்குயில்
19. பெருமை + களிறு = பெருங்களிறு புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு
A) ஈறு போதல், இடையுகரம் இ ஆதல்
B) ஈறு போதல் அடியகரம் ஐ ஆதல்
C) ஈறுபோதல், ஆதி நீடல் முன்நின்ற மெய்த்தை
D) ஈறுபோதல், இனமிகல
20. தவறானதை காண்க: (பிரித்து எழுதுக)
A) வீடினதன்றறன் = வீடின + தன்று + அறன்
B) கருநிறத்தரக்கியர் = கருமை + நிறத்து + அரக்கியர்
C) தாதூதி = தாது + ஊதி
D) இன்னரும்பொழில் = இனிமை + அருமை + பொழில்
விடைகள்:
11.C, 12.A, 13.A, 14.A, 15.B, 16.C, 17.D, 18.B, 19.D, 20.A
– தொடரும்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *