சென்னை, மே 30. தமிழ்நாடு பா.ஜ., சார்பில், மக்களவைத் தேர்தலுக்கு பின், சென்னையில் நேற்று முன்தினம், கட்சி மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாக கூட்டத்தில் பங்கேற்ற சிலர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நம் அடுத்த இலக்கு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தான். அதை நோக்கித்தான் நம் பாய்ச்சல் இருக்க வேண்டும்.
சிந்திக்க வேண்டும்
அர்ஜுனன் எப்படி இலக்கில் கவனமாக இருப்பானோ, அதைப் போல கட்சியினர் ஒவ்வொருவரும், இலக்கில்தான் கூர்மையான கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாடும், பா.ஜ.,வும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துதான் தொடர்ந்து சிந்திக்க வேண்டும்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை, ‘ஹிந்துத்துவா தலைவர்’ என குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக, அ.தி.மு.க.,வினர் என்னை எதிர்த்து கொந்தளிக்கின்றனர். கொந்தளிப்பு ஏற்படும் என்பதை நன்கு தெரிந்துதான், அப்படி பேசினேன். அதற்கு ஒரு பின்னணி உண்டு.
ஒடிசாவில் அய்.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கும் தமிழர் வி.கே.பாண்டியன் குறித்து, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பேசியது, தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒரு தமிழர் குறித்து இப்படி விமர்சிக்கலாமா என, இங்கு இருப்பவர்களை தூண்டிவிடும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல், தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைவரும் விமர்சனம் செய்தனர்.
இந்த விடயத்தில் பா.ஜ., தரப்பில் சரியான விளக்கம் எதுவும் தராத நிலையில், இந்தப் பிரச்சினை குறித்தே பேசி, விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான், ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்துவா தலைவர் என குறிப்பிட்டுப் பேசினேன்.
தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும், அந்த விடயத்தின் மீது திரும்பியது. அ.தி.மு.க., தலைவர்கள் பலரும் என் கருத்தை விமர்சித்து பேசினர். மொத்த அரசியல் களமும், இந்த விஷயத்தை நோக்கி பார்வையை திருப்பியது. இதனால், வி.கே.பாண்டியன் குறித்த சர்ச்சை அப்படியே அடங்கியது.
தீர்ப்பை படிக்கணும்
ஆக, எதை நினைத்து நான் ஜெயலலிதா குறித்து பேசினேனோ, அதே திசையில் விமர்சனங்கள் கிளம்பின. மொத்தத்தில், பாண்டியன் மீதான விமர்சன சர்ச்சை திசை திருப்பி விடப்பட்டது. இப்படித்தான், ஒவ்வொரு விடயத்தையும் பா.ஜ.,வினர் அணுக கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா ஒரு தீவிரமான ஹிந்துத்துவா தலைவர். இதில், அ.தி.மு.க.,வினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995இல் ஹிந்துத்துவா குறித்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை படிக்க வேண்டும்.
ஹிந்துத்துவா என்பது வாழ்க்கை முறை. அது மதம் கிடையாது. அனைவரையும் அரவணைப்பதுதான் ஹிந்துத்துவா.
– இவ்வாறு அண்ணாமலை பேசியதாக அவர்கள் கூறினர்.
மன்னிப்பு கேள் போஸ்டரால் சர்ச்சை
மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்துவா தலைவர் என தமிழ்நாடு பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு, அ.தி.மு.க., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அ.தி.மு.க.,வினர் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு மேனாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சீனிவாசன், உதயகுமார் உட்பட பலரும், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். கூடவே சிவ கங்கை, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களில், அண்ணாமலையை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
‘அண்ணாமலையை கண்டிக்கிறோம். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மதங்களையும் தன் வாழ்நாள் முழுதும் மதித்து, வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா குறித்து, அவதூறு பரப்பும் அண்ணாமலையை கண்டிக்கிறோம். அரைவேக்காடு அண்ணாமலையே மன்னிப்பு கேள்’ என, சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு சுவரொட்டியில் ‘1.50 கோடி அ.தி.மு.க., தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டாதே. ஜெயலலிதாவை பற்றி பேச உனக்கு தகுதி உண்டா; அண்ணாமலையே நாவை அடக்கு’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை, மே 30. தமிழ்நாடு பா.ஜ., சார்பில், மக்களவைத் தேர்தலுக்கு பின், சென்னையில் நேற்று முன்தினம், கட்சி மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாக கூட்டத்தில் பங்கேற்ற சிலர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நம் அடுத்த இலக்கு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தான். அதை நோக்கித்தான் நம் பாய்ச்சல் இருக்க வேண்டும்.
சிந்திக்க வேண்டும்
அர்ஜுனன் எப்படி இலக்கில் கவனமாக இருப்பானோ, அதைப் போல கட்சியினர் ஒவ்வொருவரும், இலக்கில்தான் கூர்மையான கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாடும், பா.ஜ.,வும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துதான் தொடர்ந்து சிந்திக்க வேண்டும்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை, ‘ஹிந்துத்துவா தலைவர்’ என குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக, அ.தி.மு.க.,வினர் என்னை எதிர்த்து கொந்தளிக்கின்றனர். கொந்தளிப்பு ஏற்படும் என்பதை நன்கு தெரிந்துதான், அப்படி பேசினேன். அதற்கு ஒரு பின்னணி உண்டு.
ஒடிசாவில் அய்.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கும் தமிழர் வி.கே.பாண்டியன் குறித்து, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பேசியது, தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒரு தமிழர் குறித்து இப்படி விமர்சிக்கலாமா என, இங்கு இருப்பவர்களை தூண்டிவிடும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல், தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைவரும் விமர்சனம் செய்தனர்.
இந்த விடயத்தில் பா.ஜ., தரப்பில் சரியான விளக்கம் எதுவும் தராத நிலையில், இந்தப் பிரச்சினை குறித்தே பேசி, விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான், ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்துவா தலைவர் என குறிப்பிட்டுப் பேசினேன்.
தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும், அந்த விடயத்தின் மீது திரும்பியது. அ.தி.மு.க., தலைவர்கள் பலரும் என் கருத்தை விமர்சித்து பேசினர். மொத்த அரசியல் களமும், இந்த விஷயத்தை நோக்கி பார்வையை திருப்பியது. இதனால், வி.கே.பாண்டியன் குறித்த சர்ச்சை அப்படியே அடங்கியது.
தீர்ப்பை படிக்கணும்
ஆக, எதை நினைத்து நான் ஜெயலலிதா குறித்து பேசினேனோ, அதே திசையில் விமர்சனங்கள் கிளம்பின. மொத்தத்தில், பாண்டியன் மீதான விமர்சன சர்ச்சை திசை திருப்பி விடப்பட்டது. இப்படித்தான், ஒவ்வொரு விடயத்தையும் பா.ஜ.,வினர் அணுக கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா ஒரு தீவிரமான ஹிந்துத்துவா தலைவர். இதில், அ.தி.மு.க.,வினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995இல் ஹிந்துத்துவா குறித்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை படிக்க வேண்டும்.
ஹிந்துத்துவா என்பது வாழ்க்கை முறை. அது மதம் கிடையாது. அனைவரையும் அரவணைப்பதுதான் ஹிந்துத்துவா.
– இவ்வாறு அண்ணாமலை பேசியதாக அவர்கள் கூறினர்.
மன்னிப்பு கேள் போஸ்டரால் சர்ச்சை
மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்துவா தலைவர் என தமிழ்நாடு பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு, அ.தி.மு.க., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அ.தி.மு.க.,வினர் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு மேனாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சீனிவாசன், உதயகுமார் உட்பட பலரும், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். கூடவே சிவ கங்கை, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களில், அண்ணாமலையை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
‘அண்ணாமலையை கண்டிக்கிறோம். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மதங்களையும் தன் வாழ்நாள் முழுதும் மதித்து, வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா குறித்து, அவதூறு பரப்பும் அண்ணாமலையை கண்டிக்கிறோம். அரைவேக்காடு அண்ணாமலையே மன்னிப்பு கேள்’ என, சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு சுவரொட்டியில் ‘1.50 கோடி அ.தி.மு.க., தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டாதே. ஜெயலலிதாவை பற்றி பேச உனக்கு தகுதி உண்டா; அண்ணாமலையே நாவை அடக்கு’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.