கரூர், செப்.2- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து பார்ப்பன நாளேடான ‘தினமலர்’ கொச்சைப்படுத்தி வெளியிட் டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் பதிலடி சம்மட்டி அடியாக விழுந்து கொண்டிருக் கிறது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருட்டிணராயபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகள் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டத்தின் பலனை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் பள்ளி கரும்பலகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிக்கு உணவு ஊட்டும் ஓவியத்தை வரைந்தனர். அதை சமூக வலைதளத்தில் ஒருவர் பகிர முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மும்பையில் இந்தியா கூட்டணி ஆலோசனை தொடர்பான நிகழ்ச் சியில் இருந்தபோது இப்படத்தை வரைந்த மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் பாராட்டி வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
”இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற் றோடும்!
அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.