சென்னை, மே 27 குமரி மாவட்ட மதிமுக செய லாளர் வெற்றிவேல் மகள் திருமண விழா நேற்று (26.5.2024) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கட்சி யின் பொதுச் செய லாளர் வைகோ நேற்று முன்தினம் (25.5.2024) நெல்லை சென்றார்.
அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோ தரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது, திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோ வுக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை புறப்பட்டார்.
நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைவந்த வைகோ, அண்ணா நகரில்உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இன்றுஅல்லது நாளை சிறிய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வைகோ விரைவில் முழுமையாக குணமடைவார். அச்சம் கொள்ளும் வகையில் வேறுஎதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.