தமிழர்கள் திருடர்களா? காங்கிரசுக்கும் – பி.ஜே.பி.,க்குமிடையே அறிக்கைப் போர்!

viduthalai
3 Min Read

சென்னை, மே 27 தமிழ்நாடு காங் கிரசுக்கும், தமிழ்நாடுபாஜகவுக்கும் வார்த்தைப் போர் முற்றி வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் நடந்த பிரச் சாரத்தில் பிரதமர் மோடி பேசும் போது, பூரி ஜெகன்னாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறை சாவி தொலைந்து போய்விட்டதாகவும், அது தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக் கப்பட்டதாகவும் விமர்சித்திருந்தார். ஒடிசா முதலமைச்சர் நவின் பட் நாயக்கின் நெருங்கிய உதவியாள ரான வி.கே.பாண்டியனை மறைமுக மாக கூறி இவ்வாறு விமர்சித்திருந்தார் பிரதமர்.

அதேபோல, தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருப்பதாக கூறி தமிழ்நாட்டுத் தலைவர்கள் கண்ட னங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

“தமிழர்களை திருடர்கள் என்று மோடி விமர்சிப்பதா? ஜன்னி கண்ட நோயாளிபோல் பிரதமர் பிதற்று வதா?” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப் பினார்!

தமிழ்ச் சமூகத்தை கொச்சைப் படுத்தும் உரிமையை யார் பிரதமர் மோடிக்குத் தந்தது? உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார் – மோடி என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கொந்தளித்துள்ளார்.

உள்துறை அமைச்சர்: இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உச்சக் கட்ட ஆவேசமாகியிருக்கிறது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து கூறும்போது, “உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி , இருவருமே இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழ்நாட்டு மக்க ளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், தமிழ்நாட்டு பாஜக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத் தப்படும் என்றும் பகிரங்கமாக எச் சரிக்கை விடுத்தார்.
உடனே இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். “பாஜக அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்” என்றார். இப்போது அண்ணாமலைக்கு, செல்வப்பெருந்தகை மறுபடியும் ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் திரு டர்கள் என்று இழிவுபடுத்தும் செய லாகும். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில், கொந்தளிப்பில் உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தேன்.

ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி யின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார்.

ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை. ஏனென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு 2014 வரை பாஜக அலுவலகத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை. பல ஆண்டு களுக்கு அப்போது மாநில அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே அலுவல கத்தில் இருந்தார். இந்த வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு கமலாலயத்தில் எத்தனைப் பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட் டியே தெரிவித்தால் அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்று செல்வப்பெருந் தகை அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *