நமக்கு தினசரி வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
1. ஒவ்வொரு ஊரிலும் படித்த பிராமணரல்லாதார் அனைவரையும் ‘விடுதலை’யை வாங்கி வாசிக்கச் செய்யவேண்டும்.
2. ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் ‘விடுதலை’க்கு ஏஜெண்ட் ஏற்படச் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு ஊர்ச் செய்தியையும் அப் போதைக்கப்போது சிரமத்தையும் செலவையும் பார்க்காமல் ‘விடுதலை’க்கு அனுப்பி வைக்க வேண்டும்.
4. பெரிய ஊர்கள் தோறும் இயக்கத்தில் அனுதாபம் உடைய பிராமணரல்லாத பிரமுகர்களின் உதவியைப் பெற்று ‘விடுதலை’க்கு அனுபவமுடைய சொந்த நிருபர்கள் ஏற்படச் செய்ய வேண்டும்.
5. பிரபல வியாபாரிகள், முனிசிபல் கமிஷனர்கள், ஜில்லா போர்டு தலைவர்கள், வக்கீல்கள் முதலியவர் களைக் கண்டு ‘விடுதலை’க்கு விளம்பரம் கொடுக்கும் படியாகத் தூண்ட வேண்டும்.
6. உண்மை உணர்ச்சி உள்ள பிராமணரல்லாதார் ஒருவர் அங்கத்தினராக இருந்தாலும் ஒவ்வொரு வாசகசாலையிலும் ‘விடுதலை’ வருமாறு செய்வது சுலபமானது.
7. ‘விடுதலை’யைக் கண்டு எவரும் பரிகசித்தால், பழித்தால் அதற்கு சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது.
8. ஆராய்ச்சியில் வல்லவர்களையும், நல்ல எழுத்தாளர்களையும் ‘விடுதலை’க்கு விஷயதானம் செய்யுமாறு தூண்ட வேண்டும்.
9. இனாமாக விடுதலை’யை எதிர்பாராமல் ஒவ் வொருவரும் காசு கொடுத்து வாங்கியும், சந்தாவைக் காலா காலத்தில் கட்டியும் பணநஷ்டம் ஏற்படாமல் செய்ய வேண்டும்.
– ‘விடுதலை’, 24.3.1937
விடுதலை சந்தாதாரர் ஆகிவிட்டீர்களா?
Leave a Comment