அமித்ஷாவே, கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள்

2 Min Read

தென் அமெரிக்காவின் கயானா நாட்டின் மேனாள் பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து ஒரு தமிழர். தற்போது அதிபராக உள்ள இர்பான் அலி முன்னோர்கள் நெல்லையில் இருந்து முன்பு வணிகத்திற்காக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த கயானாவிற்குச் சென்று அம்மக்களோடு இணைந்து போராடி பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்து மீட்டு அந்த நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களின் மகன் ஆவார்.
சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முக ரத்தினம் தமிழர் தான். சிங்கப்பூரின் இருமுறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேனாள் அதிபர் மறைந்த எஸ்.கே.நாதன் ஒரு தமிழர்.

கனடாவில் முதன்முறையாக நாடாளுமன்றம் சென்ற ராதிகா சிற்சபேசன் ஒரு தமிழர். நியூ வெஸ்ட்டன் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சுசிந்திரன் முத்துவேல் ஒரு தமிழர். அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் ஒரு தமிழர்.
அதுபோல் ஒடிசாவின் மருமகனான மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியன் தமிழர் – ஆமாம், அவர் மீது மட்டும் மோடி அமித்ஷா அண்ட் கம்பெனிகளுக்கு ஏன் இந்த எரிச்சல்?
அறிவார்ந்த தமிழர். அம்மக்களையும் அறிவுமிக்கவர் களாக மாற்ற பல திட்டங்களை தீட்டுகிறாரே என்ற அச்சம்தானே காரணம்.

கேரளா பாஜக தலைவர் கூறியது: தென் மாநிலங்களில் பாஜக ஏன் வளர்ச்சி பெறவில்லை என்றால் இங்கே படித்தவர்கள் அதிகம் உள்ளனர் என்று கூறினார். அதனால் தான் ஒடிசாவிலும் தங்களின் கட்சியின் வளர்ச்சிக்கு கல்வி கற்ற மக்கள் தடையாக உள்ளார்கள் என்ற ஆத்திரம் வருகிறது அமித் ஷாவிற்கு. தமிழர்கள் இயல்பாக இரக்கமும் பணிவும் நன்றியும் மொழிப்பற்றும் தன் மானமும் உடையவர்கள்.

வெளிநாடுகளுக்கு பணத்தைத் திருடிக் கொண்டு தப்பி ஓடியவர்களின் பட்டியலில் உள்ள நீரவ் மோடி, மோகுல் ஷோக்சி உள் ளிட்ட பலர் குஜராத்திகள். ஆகையால், குஜராத்திகள் அனைவரும் திருடிவிட்டு ஓடு பவர்கள் என்று கூறுவது ஒட்டுமொத்த குஜராத்திகளையும் அவமதிப்ப தாகும். இதைக் கூறியதும் நீங்கள் தான், வெளிநாட்டிற்கு தப்பியவர்கள் பெயரும் மோடிதான் என்று நீரவ் மோடி, லலித்மோடி குறித்து ராகுல் பேசிய போது ஒரு சிலரைச் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த குஜராத்திகளை இழிவு செய்கி றார்கள் என்று வழக்கு தொடர்ந்தவர் பாஜக வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என் பதையும் நினைவில் கொள்ளுங்கள் அமித்ஷா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *