கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

3.9.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆய்வு செய்ய அமித்ஷா உள்ளிட்ட 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அறிவிப்பு. காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுப்பினராக சேர மறுப்பு.

👉 பெண்கள் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்.கிருஷ்ணய்யா,எம்.பி. தலைமையிலான அமைப்பு செப்டம்பர் 19இல் டில்லியில் ஆர்ப்பாட்டம்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉2 ஆண்டுக்கு பின் நடந்த தேர்தலில் அமோக வெற்றி – சிங்கப்பூர் அதிபரானார் தமிழர் தர்மன் சண்முக ரத்தினம் – தலைவர்கள் வாழ்த்து.

👉 அரசு பள்ளியில் இருந்து இஸ்ரோவுக்கு – ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்  தென்காசியை சேர்ந்த நிகர் ஷாஜிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தி இந்து:

👉 2024 தேர்தலுக்கு உருவாக்கப்பட்ட இந்தியா  கூட்டணி, ஒருங்கிணைப்புக் குழுவில்  திமுக எம்.பி.க்கள் கனிமொழி (ஊடகம்), தயாநிதி மாறன் (சமூக வலைத்தளம்), ஆ.ராசா (ஆராய்ச்சி), திருச்சி சிவா (பிரச்சாரம்)  நியமிக்கப் பட்டுள்ளனர்.

தி டெலிகிராப்:

👉நாட்டில் உள்ள 2-3 பெரும் பணக்காரர்களின் நலனுக்காக பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பாடுபடுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது என ராகுல் பேச்சு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉கடைகளுக்குப் பெயர் பலகைகளை தமிழில் வைக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்:

👉 ‘ரோகிணி கமிஷன்’ ஓபிசி ஒதுக்கீடு கொள்கையில் முக்கிய மாற்றங்களை பரிந்துரைக்க வாய்ப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *