திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப்பணி தீவிரம் பெரியார் பெருந்தொண்டருக்கு பாராட்டு

Viduthalai
2 Min Read

திருப்பத்தூர, மே 23- திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர் வ.புரட்சி விடுதலை சந்தா வழங்கினார்.
இவர் திராவிடர் கழகத்திற்கும், விடுதலை சந்தா சேர்ப்புக்கும் பெரும் பங்களிப்பவர் . திருப்பத்தூர் மாவட்ட கழகத்தின் விடுதலை வாசகர் வட்ட செயலாளர், மேனாள் ரோட்டரி சங்க தலைவர், எல்.அய்.சி. முகவர் இப்படி பல பொறுப்புகளில் இருப்பவர்.
பெயருக்கு ஏற்ற புரட்சியாளர் தான் இவர். இவர் இப்படி தான் இருக்க முடியும். ஏன் என்றால் இவருக்கு பெயர் சூட்டியவர் தந்தை பெரியார் ஆயிற்றே.
இவர் குடும்பம் ஒரு சுயமரியாதை குடும்பம். வெளித் தோற்றத்தில் வெள்ளை சட்டையை அடையாள மாக கொண்டு, உள்ளத்தில் கருப்புச் சட்டைக்காரராக வாழ்பவர். தன் குடும்பத்தில் ஜாதி மறுப்புத் திரு மணம், சுயமரியாதைத் திருமணம் செய் தவர்.

மாவட்ட திராவிடர் கழகம் நிகழ்ச்சி, கலந்துரையாடல் கூட்டம் எங்கே நடந்தாலும் முதல் ஆளாக வருகை தந்து அனைவருக்கும் சாக்லேட், பழங்கள் என்று கொண்டு வந்து கொடுப்பார். தந்தை பெரியார் அவர்களின் படங்களை, பள்ளிக் கூடங்கள், அலுவலகங்கள், கழகத் தோழர்களுக்கு என்று இவர் நிகழ்ச்சிக்கு செல்லும் இடமெல்லாம் கொடுத்து தந்தை பெரியார் அவர் களின் மீது இவருக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துவார். இப்படி இவர் கொடுத்த தந்தை பெரியார் படங்கள் நூறு படங்களுக்கு மேல் இருக்கும்.
சமீபத்தில் நடந்த விடுதலை சந்தா சேர்ப்பு குறித்த கலந்துரை யாடல் கூட்டத்தில் பங்கேற்று, தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாநில பகுத் தறிவாளர் துணை பொதுச்செயலா ளர் அண்ணா. சரவணன் ஆகியோ ருக்கும், தோழர்களுக்கும் படங் களை வழங்கியது மட்டுமல்லாது.

திராவிடர் கழகம்

விடுதலை நாளிதழ் முதல் சந்தாவாக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்திற்கு தன் சார்பில் ஓர் ஆண்டு சந்தா ரூ. 2000 தொகையை மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசனிடம் வழங்கி ரசீதை பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் தன் சார்பில் 10 சந்தாக்களை பெற்று தருகிறேன் என்று உறுதி அளித்தார்.
இவரை பற்றி இங்கே குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம். விடுதலை சந்தா சேர்ப்பில் மாவட்ட கழகத் தோடு தொடர்ந்து இணைந்து செயல்படுகிறவர். தான் செய்யும் செயலுக்கு எவ்வித பிரதிபலனையும், விளம்பரத்தையும், நன்றியையும் எதிர்பார்க்காத சுயமரியாதைக்காராக வாழும் இவரை, இவர் எதிர்பார்க் காவிட்டாலும், நாம், இது போன்ற அப்பழுக்கற்ற, தனி மனித ஒழுக் கத்திலும் சிறந்த விளங்குபவர்களை இன்றைய தோழர்களிடம் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான். தொடர்ந்து விடுதலை சந்தா சேர்ப்பில் ஈடுபடும் இவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பாராட்டு தெரிவித் தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *