கடவுளைக் கவிழ்த்த குற்றவாளிகள் யார்?

1 Min Read

சென்னை, மே 22 திருவொற் றியூர் காலடிப்பேட்டை கல் யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கருட சேவை நிகழ்ச்சி இன்று (22.05.2024) காலை நடை பெற்றதாம்.

பவள வண்ண பெருமாள் சிலை சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் தூக்கி வரப்பட்டது. கருட சேவை நிகழ்ச்சிக்காகப் பல்லக்கைத் தூக்கியபோது அதன் தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருமாள் சிலை சரிந் ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பட்டாச் சாரியார் முரளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பெருமாள் சிலை சரிந்ததும் உடனடியாக கோவில் வாசல் மூடப்பட்டது. சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப் பட்டதாம்.
ஒரு பெருமாள் சிலையை மரத் தண்டில் வைத்து, தோளில் பார்ப்பனரல்லாத பக்தர்கள் தூக்கிவரும்போது, அதைத் தாங்கும் அளவுக்குக் கூடவா தண்டு லேசாக இருந் திருக்கும்.

அல்ல… அல்ல… பல்லக்கு போல, மரத் தண்டில் பெரு மாள் சிலையை வைத்துத் தோள் கனக்கத் தூக்கி வரும் போது, அதில் மேலே நின்று கொண்டிருந்த இரண்டு பார்ப்பனப் பட்டாச்சாரி யார்களின் கனம் தான் அந்தத் தண்டு முறிந்து போனதற்குக் காரணம். ஒரு பொம்மையைத் தூக்கி வருவதற்கு உகந்த மரத் தண்டில், பூஜை செய்கிறோம் என்ற பெயரில் பல்லக்கில் ஏறி நின்றுகொண்டு தமிழர் களின் தோளில் சவாரி செய்ய நினைத்து, பெருமாளையும் சேர்த்துச் சரித்தவர்கள் பார்ப் பனர்கள்தான்!

இனி, இதற்குப் பூஜை, புனஸ்காரம், பரிகாரம் என்று வேறு கிளப்பிவிட்டு, அதிலும் கல்லா கட்டு வார்கள்.
‘கடவுளைக்’ கவிழ்த்து விட்ட கயவர்கள் யார் என் பதை இனியேனும் பக்தர்கள் உணர்வார்களா?
பார்ப்பானைப் பல்லக் கில் சுமக்கும் இழிவை இனி யேனும் விடுவார்களா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *