விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்

2 Min Read

ஆம்பலாப்பட்டு திருவள்ளுவர் படிப்பகத்திற்காக தஞ்சாவூர் ஓவியர்
து.தங்கராசு ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000, தஞ்சாவூர் வஸ்தாசாவடி தங்கம் கிரேன் சர்வீஸ் உரிமையாளர் சமயன்குடிக்காடு க.அருண் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000, தஞ்சாவூர் முரளி ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் தஞ்சை தம்பா அரை ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.1000 – மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (21-05-2024)

நன்கொடை
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் ஆகியோர் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினர். உடன் குமரிமாவட்ட திராவிடர்கழக இளைஞரணி செயலாளர்
எஸ். அலெக்சாண்டர் உள்ளார்.

நன்கொடை

தஞ்சாவூர் குடும்ப விளக்கு தலைமை நிர்வாகி வேணு கோபால் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000 மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், காப்பாளர்
மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கினார் (22.5.2024)

நன்கொடை

தஞ்சாவூர் மாதாக்கோட்டை பொறியாளர் கி.சவுரிராஜன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார் (21-05-2024)

நன்கொடை

கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர்
கோ.வெற்றி வேந்தனிடம் திமுக அயலக அணி நிர்வாகி சரல்விளை மு.இளங்கோ தனது மகளின் பிறந்த நாள் விழாவில் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை வழங்கினார். உடன்: திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், திமுக பொறியாளர் அணி மாவட்ட தலைவர் இராஜேஷ் இரத்தினமணி உள்ளனர்.

நன்கொடை

திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர், மொழிப்போர்தளபதி எல். கணேசன்-கமலாகணேசன் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (21-05-2024),

நன்கொடை

தஞ்சாவூர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பயிற்சி மய்யம் சார்பாக ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000 காப்பாளர் மு. அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கப்பட்டது
(22-05-2024)

நன்கொடை

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர்
க. சுடர்வேந்தன், ஒரத்தநாடு முத்தமிழ்அரங்கம் உரிமையாளர் நெடுவை முத்தமிழ், கண்ணை மேற்கு இரா. செல்வராசு, பருத்திக் கோட்டை வழக்குரைஞர் க. சுரேஷ்கண்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள்முதல்வர் பேராசிரியர் வி.ஜெயராஜ், தமிழ்ப் புலிகள் கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் அ.ரெ.முகிலன் ஆகியோர் ஓராண்டு சந்தா வழங்கினர். உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர்த.செகநாதன், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா. இராமகிருட்டிணன், கட்டட பொறியாளர் ப.பாலகிருட்டிணன், புலவர் இரா. மோகன்தாஸ் பெரியார் நகர் சக்திவேல் ஒன்றிய தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ. இராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் அழகு. இராமகிருட்டிணன், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா. திராவிடச் செல்வம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *