சென்னை, மே 20– தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பேரிடர் மீட்பு படைவீரர்கள் குழு தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
23ஆம் தேதி வரை மழை
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடைமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங் கள், தமிழ்நாடு உள் மாவட்டங்கள். மேற்கு தொடர்ச்சி மலையை ஓட் டிய மாவட்டங்களில் பரவ லாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தென் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு கழற்சி காரண மாக தமிழ்நாட்டின் பெரும்பா லான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23ஆம் தேதி வரை லேசா னது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
அதி கனமழை
அதேபோல், இன்று (20.5.2024) முதல் வருகிற 22ஆம் தேதி வரையில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென் காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.
மேலும் இன்றும், நாளையும் விருது நகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இன்று, ராமநாத புரம், மதுரை, சிவ கங்கை, தூத்துக்குடி, தஞ்சா வூர், திருவாரூர், மயிலாடு துறை, நாகை, கடலூர், அரியலூர், பெரம்ப லூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிக ளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில்….
நாளை மதுரை, சிவகங்கை, புதுக் கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயி லாடுதுறை. நாகை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி. விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வருகிற 22ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை. மயிலாடுதுறை, கடலூர் மாவட் டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 23ஆம் தேதி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வெப்பநிலையை பொறுத்தவரை யில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் இயல்பைவிட குறைந்தே காணப்படும். குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு, -மாலத்தீவு பகுதி, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு வருகிற 23ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது.
பேரிடர் மீட்புப் படைவீரர்கள் அனுப்பிவைப்பு
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங் களுக்கு கனமழை முதல் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலை யில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் சுமார் 2 கோடி செல்பேசி எண்களுக்கு பொதுவான முன்னெச்சரிக்கையாக குறுந்தகவல் களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் அனுப்பப் பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள், கன்னி யாகுமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங் களில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின்போது இடி, மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியாகி இருப்பதா கவும், 15 கால்நடைகள் கனமழை காரணமாக இறந்திருப்பதாகவும், 7 குடிசைகள், வீடுகள் சேதம் அடைந்திருப் பதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை தெரிவித் துள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு
வானிலை ஆராய்ச்சியாளர் தகவல்
தமிழ்நாட்டில் கோடை மழை ஆங் காங்கே பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 22ஆம் தேதி உரு வாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வருகிற 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘புயலாக’ மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில், வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அது, புயலாக மாறுவதற்கு முன்பு தமிழ்நாட்டை விட்டு விலகும். இருப் பினும், இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள் ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட் டத்திலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.