சிங்கப்பூர், மே 19 சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிங்கப் பூரில் புதிதாக 25,900 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அங்கு நாள்தோறும் சராசரியாக 250 பேர் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இதில் சராசரியாக தினமும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பரிவில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.