தி.க., தலைவர் வீரமணி பேச்சு:
எல்லாவற்றுக்கும், ‘ஒரே ஒரே’ என்று போடுகிறீர்களே… ஒரே ஜாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை… மக்கள் அனைவரும் ஒரே ஜாதி என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்கு துணிச்சல் இல்லை… ஒரே மதத்தைக் கேட்கிறீர்களே… ‘ஒரே ஜாதி, மக்கள் அனைவரும் ஒரே மக்கள்’ என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்கு மனம் வரவில்லை?
இவர் ஆதரிக்கும் ஆளுங்கட்சியில், 55 வருஷமா ஒரே குடும்பமே, தலைமை பதவிக்கு வருகிறதே… அந்த, ‘ஒரே’வை இவர் ஏன் தட்டிக் கேட்கலை?
‘தினமலர்’, 5.9.2023, பக்கம் 8
திராவிடர் கழகத் தலைவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் கூற வக்கற்ற இந்தக் கூட்டம் வழக்கம் போல திசைதிருப்பும் கோணல் புத்தியோடு கதைக்கிறது.
ஒரே குடும்பத்தில் உள்ளவர்களாக இருக்கட்டும். மக்களால் வாக்களிக்கப்பட்டே பதவிக்கு வருகிறார்கள்.
சங்கர மடத்தில் பார்ப்பனரல்லாத ஒரே ஒரு இந்துவை சங்கராச்சாரியாக்கத் தயார் தானா?