தஞ்சாவூர், மே 17- தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மய்ய நூலகம் வாசகர் வட்டம் சார்பாக வணிக நிறுவனங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைத்திருக்கும் நிறுவன உரிமையாளர் களுக்கு ஆண்டுதோறும் “தண்டமிழ் ஆர்வலர்” என்ற விருது வழங்கி பாராட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் கீழவீதி யில் நீண்ட காலமாக நடந்து வருகிற தமது வணிக நிறுவனத்திற்கு “காவேரி மருந்தகம்” என்று நல்லத் தமிழில் பெயர் சூட்டியுள்ள திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனாரைப் பாராட்டி 12.5.2024 அன்று விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விருது பெற்ற காப்பாளர் மு.அய்ய னாரை மாநில தலைமைக் கழக ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி ஆகியோர் 16.05.2024 அன்று நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
கழக காப்பாளர் மு. அய்யனாருக்கு “தண்டமிழ் ஆர்வலர்” விருது!
Leave a Comment