தஞ்சாவூர், மே 17- தஞ்சாவூர் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16-5-2024 மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங் தலைமையில் நடை பெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு ‘விடுதலை’ சந்தா பரவலாக சேர்க் கப்பட வேண்டியதன் அவசியம் முக்கியத் துவம் குறித்து விரிவாக உரையாற்றினார்.
தொடர்ந்து கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.குணசேகரன் இயக்கத்தின் தொடர்ந்த செயல்பாடுகள் குறித்தும் ‘விடு தலை’ சந்தா எளிமையாக சேர்க்கும் வழிமுறை குறித்தும் உரையாற்றினார்.
மாவட்ட மாவட்டச் செயலாளர் அ.அருண கிரி வரவேற்று உரையாற்றினார்.
தஞ்சாவூர் மாநகர தலைவர் பா. நரேந்திரன், தஞ்சாவூர் மாநகர செயலாளர் செ.தமிழ்ச் செல்வன், தஞ்சாவூர் மாநகர இணைச் செய லாளர் இரா.வீரக்குமார், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராஜ், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
கா. அரங்கராஜ், பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு, அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன், மாநகர துணை செய லாளர் இரா.இளவரசன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே. பொய்யாமொழி, மாவட்ட கழக இணைச் செயலாளர் வடசேரி தீ.வ. ஞான சிகாமணி, அம்மாபேட்டை ஒன் றிய துணைச் செயலாளர் சாலியமங்கலம் இராஜேந்திரன், அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், திருவையாறு நகரத் தலைவர் கௌதமன், கரந்தை பகுதி தலைவர் விஜயன், கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி,திராவிட மாண வர் கழகம் மாநில செயலாளர் இரா.செந் தூரபாண்டியன், மாநில ப.க அமைப்பாளர் கோபு.பழனிவேல் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி. இராம தாஸ், மாநகர மகளிரணி செயலாளர் சாந்தி, திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி, மாணவர் கழகத் தோழர் நிலவன் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
கிராமப்பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் க.குருசாமி, கழக காப் பாளர் மு. அய்யனார் ஆகியோர்நிறைவாக கருத்துரையாற்றினர். பூதலூர் ஒன்றிய செய லாளர் ரெ.புகழேந்தி நன்றி கூறினார்
கூட்டத் தொடக்கத்தில் மாநகர இளை ஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன் கடவுள் மறுப்பு கூறினார்.
கூட்டத்தில், 24.3.2024 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்டு ஏடான விடுதலைக்கு தஞ்சை கழக மாவட்ட சார்பில் கொடுக்கப்பட்ட இலக்கையும் தாண்டி சந்தாக்களை திரட்டி வழங்குவது எனவும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டுவிழா- குடிஅரசு ஏடு நூற்றாண்டு விழா கூட்டங்களை மாவட்ட முழுவதும் பரவலாக நடத்துவது எனவும், மே 20 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்ட வரவு – செலவு மாநகர திராவிடர் கழக பொறுப்பாளர்களால் சமர்ப் பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் செல்வராஜ் ,மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் ஜெ. பெரியார்கண்ணனின் தாயார் ஜெ.அல்லியம்மாள், மேனாள் துணைவேந்தர் நல். இராமச்சந்திரன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் நல்.பரமசிவம் ஆகியோ ரின் சகோதரரும் புழவன்காடு ஊராட்சி மன்ற தலைவருமான மாநல். மெய்க்கப்பன் ஆகி யோர் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரி விக்கப்பட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.