17.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு.
* எந்த சிறப்பு விலக்கு அளித்தும் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு பிணை வழங்கப்படவில்லை. வழக்கின் தன்மை யில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – அமித்ஷா குற்றச் சாட்டுக்கு உச்ச நீதிமன்றம் பதிலடி.
* இட ஒதுக்கீட்டை ரத்து செய்யத்தான் பாஜக 400 கேட்கிறது – டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சாடல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முஸ்லிம்களுக்கான காங்கிரஸ் பட்ஜெட் என பொய்யான கருத்து குறித்து பிரதமர் மோடியின் முட்டாள் தனமான அறிக்கை என சரத்பவார் கண்டனம்.
* திருமணத்தின் புனிதம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு பின்னால், வளர்ந்து வரும் சமூக கவலை குறித்து விளக்குகிறார் கட்டுரையாளர் பேராசிரியர் சினேகா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மல்யுத்த வீராங்கணைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தற்போதைய எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகனுக்கு பாஜக மக்களவைக்கு போட்டியிட சீட்டு வழங்கியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் மீண்டும் தனது தாக்குதலைத் தொடர்ந்தது, மேலும் மோடியின் இந்தியா வில் பெண்கள் எப்போதாவது பாதுகாப்பாக இருப்பார் களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
தி டெலிகிராப்:
* ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், ஆட்சிக்கு வந்தவுடன் இட ஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பிறகு, கைது நடவடிக்கைகளை எடுக்க அமலாக் கத் துறைக்கு கட்டுப்பாடுகளை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment