மதுக்கூர், மே 16- மதுக்கூர் மாணிக்க.சந் திரன் அவர்களின் வாழ்விணையர் சரோஜா அம்மையார் படத்தினை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்தார்
14.5.2024 அன்று இரவு 7 மணி அளவில் பட்டுக்கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் வடக்கு பகுத்தறி வாளர் கழக மாவட்ட அமைப்பாளர் மாணிக்க.சந்திரன் அவர்களின் வாழ் ணையரும் ச.அண்ணாதுரை,ச.கருணா நிதி, கனிமொழி ஆகியோரின் தாயாரு மான சரோஜா அம்மையார் அவர் களின் படத்திறப்பு நிகழ்ச்சி மதுக்கூர் வடக்கு அவர்களது இல்லத்தில் நடை பெற்றது
தஞ்சை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
கா.அண்ணாதுரை நிகழ்வுக்கு தலைமை ஏற்றார்.
மதுக்கூர் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோ மதுக்கூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் லண்டன் கோவிந்தராஜ், மாவட்ட கழக தலைவர் பெ. வீரய்யன், மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் அசோக் ராணி, மருத்துவர் அ.மு செல் லப்பன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட் ஆகியோர் முன்னிலை யேற்றனர்
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மறைந்த சரோஜா அம்மையாரின் படத்தினை திறந்து வைத்தார்
கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் இரங்கல் உரையாற்றினார்.
மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முத்து.துரைராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீல கண்டன், மாவட்டத் துணைத் தலைவர் சொக்கநாவூர் சிவாஜி, மதுக்கூர் ஒன் றிய கழகத் தலைவர் புழவஞ்சி அண்ணா துரை, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி நகரத் தலைவர் சந்திரமோகன், படப்பைக்காடு ரஞ்சித்குமார், பெரம்பையன், மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன், சேதுபாசத்திர ஒன்றிய செயலாளர் சண்முகவேல், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் வீரமணி மாவட்டத் துணைச் செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட கழகத் தோழர் கள் உறவினர்கள் நண்பர்கள் அனைத் தாகிய அரசியல் இயக்க பொறுப் பாளர்கள் தோழர்கள் பங்கேற்றனர்.