மதுரை, மே 16 போதைப் பொருள் ஒழிப்பில் துரித நட வடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் நடவடிக் கைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் திரு முருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் கடந்த ஏப். 22ஆம் தேதி, 7 பேர் மது போதையில் பிரச்சினை செய்து அவ்வழியாக வந்தவரை தாக் கினர். எனவே, ஒத்தக்கடை, அய்யப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கவும், போதை பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல் முருகன், ராஜசேகர் ஆகியோர் முன் நேற்று (15.5.2024) விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘சம்பந்தப்பட்ட வழக் கில் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தர விட்டிருந்தது. ஆனால் குறிப் பிட்ட ஆய்வாளரே கிளை காவல் நிலையத்தில் நியமிக்கப் பட்டுள்ளார்’’ என தெரிவிக்கப் பட்டது. அப்போது அரசுத் தரப்பில், ‘‘பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத் தப்பட்டுள்ளன. கஞ்சா மட்டு மின்றி ஹெராயின் உள்ளிட்ட பிற போதைப்பொருட்களும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023இல் மட்டும் ரூ.1 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரத்து 957 மதிப்பிலான பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 7,389 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும்தான் மாவட்ட வாரியாக உதவி ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போதை தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதனால் ஒன்றிய அரசின் அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தான் குறைவான அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. ஒத்தக்கடை பகுதியை பொறுத்தவரை 2019 முதல் கடந்த ஏப்ரல் வரை 49 போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,070.670 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது.
அப்போது போதைப் பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறிய நீதிபதிகள், தமிழ்நாட் டிற்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண் டும் என அறிவுறுத்தி, விரிவான உத்தரவை பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைத்தனர்.