கோபி, மே 15- கோபி கழக மாவட்டம் அளுக்குளி பேருந்து நிறுத்தம் அருகில் 12.5.2024 ஞாயிறு மாலை 6.00 மணி அள வில் “சுயமரியாதை இயக் கம் நூற்றாண்டு – “குடி அரசு நூற்றாண்டு விழாக் களை முன்னிட்டு பொதுக் கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. கூட்டத் தில் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார்.
அவரது உரையில், சுயமரியாதை இயக்க சாதனைகள், குடிஅரசு இதழின் சாதனைகளை விளக்கியும் அதனால் தமிழ்நாடு அடைந்த பயன் களையும் எடுத்து விளக் கினார்.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன் தொடக்கவுரை யாற்றி னார்.
கூட்டத்தில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் மா.கந்தசாமி, பொதுக் குழு உறுப்பினர் க. யோகானந்தம், மாவட்ட ப.க.தலைவர் சீனு. தமிழ்ச் செல்வி, சதுமுகை பழனி சாமி, வீ.கே.மூரத்தி, ஒன் றிய செயலாளர் சத்திய மங்கலம், நம்பியூர் ஒன் றிய செயலாளர் அரங்க சாமி, புரட்சிகர இளை ஞர் முன்னனி வெங்கட், மாநில இ.அ.துணை செயலாளர் பா. வெற்றி வேல், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ம. சூரியா, மண்டல மாண வர் கழக செயலாளர் சிவ பாரதி, மகளிர் பாசறை செயலாளர் ப.திலகவதி, சா.சத்தியவதி, நதியா, பவானிசாகர் விசுவ நாதன், சீனு மதிவாணன், பெ.கந்தசாமி, கொடி வேரி ஜெயக்குமார், தி.மு. க.செந்தில்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு கருத்துரை யாற்றினார் கள்.
பெருந்திரளான தோழர்கள், பொது மக்கள் கூட்டத்தினை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தனர். சிறப்புரை யாளர் கருத்து மழை முடிந்தவுடன் கனமழை தொடங்கியது.