சென்னை, மே 15- தமிழ்நாட்டில் நடந்து முடிந்த முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் மாவட்ட தலைவர்களின் செயல்பாடு பாஜக தலைமையை அதி ருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சில நாள்களில் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட இருப்பதாகவும் சில முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் தமிழ்நாடு பாஜகவினர்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங் களாக இந்தியாவில் நடைபெறும் நிலையில் இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் 4ஆ-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேர்தல் நிறைவடைந்து விட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகவும் ஒரே கட்டமாகவும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நிறை வடைந்தது. பெரிய அளவிலான அசம் பாவித நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாகவே நடை பெற்றது.
தேர்தல் விதிமுறைகள்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசு நிகழ்ச்சிகளுக்கும் அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அறிக்கைகள், எக்ஸ் பதிவோடு அவர்கள் தங்கள் வழக்கமான அரசியல் பணியை மேற் கொண்டு வருகின்றனர். அதே நேரத் தில் தேர்தல் நிறைவடைந்த உடன் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளிலும் அதிருப்தி குரல்கள் எழுந்தன. தேர்தல் முடிவடைந்ததும் அனைத்துக் கட்சி தலைமைகளும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டன.
பட்டியல் தயாரிப்பு:
தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றியவர்கள், ஓரளவு பணியாற்றியவர்கள், தலை மையை ஏமாற்றியவர்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும் என கூறப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை சென்னை மண்ட லத்தில் உள்ள மாவட்ட செயலாள ருடன் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றிருக்கிறது.
அதில் பொது செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி மிகவும் அதிருப்தியில் பேசியதாகவும், கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் விசுவாசமாக இல்லை, நாடாளுமன்றத் தேர்தலில் செயல் பாடுகள் மோசமாக இருந்தது.
இதனால் வெற்றி பெற வேண்டிய தொகுதிகள் கூட கைவிட்டுப் போனது என பேசியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜக: இதே போன்ற நிலைமை தான் தமிழ்நாடு பாஜகவிலும் இருக்கிறது என்கின்றனர் நிர்வாகிகள். கூட்டணிக் கட்சிகளுடன் ஒத்துழைக் காதது, உட்கட்சி அரசியல், செலவுக்கு கொடுத்த பணத்தை செலவு செய்யாதது, பூத் ஏஜெண்டுகளுக்கு முறையாக பணத்தை பிரித்துக் கொடுக்காதது என பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதை அந்த தலைமை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக பணம் பிரிக்கும் தகராறு திருவாரூரில் நிர்வாகி ஒருவர் வெட் டப்பட்ட நிகழ்வு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பாஜக மாவட்ட தலைவரே கைதாகி தற்போது சிறையில் உள்ளார்.
மாவட்ட தலைவர்கள்: ஏற்கெனவே இதே புகார் எழுந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வரவு, செலவு கூட்டம் நடத்தி ஆய்வு செய்து தங்களிடம் அறிக்கையை ஒப்படைக்க வேண்டும் என டில்லி தலைமை உத்தரவிட்டி ருந்தது.
இதை அடுத்து பல மாவட்டங்களில் வரவு, செலவு கூட்டம் நடத்தப்பட்டு அறிக்கையை தலைமைக்கு அனுப்பப் பட்டு இருக்கிறது. அறிக்கைக்கும் செலவு செய்த பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்த தலைமை மாநில தலைமைக்கு அறிக்கை கொடுத்ததாக தற்போதைய தகவலா னது இருக்கிறது.
இதன் காரணமாக தேர்தலில் ஒழுங்காக பணியாற்றாத நிர்வாகிகள் கட்சியுடன் மோதல் போக்கை மேற் கொண்ட நிர்வாகிகள் பணத்தை செலவு செய்யாத நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் இத னடிப்படையில் மாவட்ட தலைவர்கள் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
விரைவில் மாற்றம்: குறிப்பாக தென் மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளில் தான் அதிக சிக்கல் இருப்பதை உணர்ந்த பாஜக தலைமை அந்தந்த மாவட்ட தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வும், புதிய தலைவர்களை நியமனம் செய்யவும் தீவிரம் காட்டி வருகிறது.
இன்னும் சில வாரங்களில் இதற் கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் இதனைத் தெரிந்து கொண்ட மாவட்ட தலைவர்கள் தலைமையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடு கின்றனர்.
ஆனால் நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்கின்றனர் செய்தி யாளர்களிடம் பேசிய பாஜக நிர் வாகிகள்.