எங்க ஊர் சுயமரியாதை பெற்ற கதை

2 Min Read

அது எங்கள் கிராமத்துச் சுவர்களில் நாங்கள் பெரியார் கருத்துகளை எழுதிப் பிரச்சாரம் செய்துவந்த காலம்….

எங்க ஊர் நிழற்குடை எங்களின் அதிகாரப்பூர்வ விளம்பரப் பலகையா கவே இருக்கும்.
2003 ஆம் ஆண்டு பச்சைத் தமிழர் காமராசர் நூற்றாண்டுப் பொதுக்கூட்டம் நடத்தியபின் ஊரில் இருந்த பெரிய மனுசன்கள் எல்லாம் ஒன்றுகூடி தி.க. பிரச்சாரத்தை முறியடிக்க நாம் கோவில் விழாக்களை பெரிதாகக் கொண்டாடு வோம் என்று தீர்மானம் போட்டு பொள்ளாச்சி மகாலிங்கம் குடும்பத்து மாப்பிள்ளையாக இருந்த எங்க ஊர்க் காரரை கோவில் தலைவராக்கி கத்தி கட்டி விட்டனர். நாங்கள் மொத்தமே ஏழு தோழர்கள் தான்…

வாரந்தோறும் சுவர் விளம்பரம் எழுதுவோம். தெருக்களில், பேருந்து நிறுத்தத்தில், தேநீர்க் கடைகளில் உட்கார்ந்தபடி நடப்பு அரசியலோடு பெரியாரியலையும் கலந்து பத்துப் பேருக்குக் கேட்கும்படி அரசியலை விவாதிப்போம். கவனிக்கிற மக்களுக்கு கூடுதலாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தால் எங்களி லேயே ஒருவர் சந்தேகம் கேட்பது போலக் கேள்வி கேட்பார்… ஒருவர் அவருக்கு பதில் சொல்வது போல மக்களுக்குச் செய்தி சொல்லிவிடுவோம். இதுதான் அப்போதைய எங்கள் பிரச் சார உத்தி.
இந்தச் சூழலில் கோவிலுக்குப் புதி தாகத் தலைவரான பிரகாஷ் என்பவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஊருக்கு வருவார். பொதுமக்கள் நூறுபேர் புடைசூழ கோவிலுக்குப் போவார். பூஜைகள் அர்ச்சனைகள் நடக்கும். முடிவில் எல்லோருக்கும் பொங்கல் – புளியோதரை வழங்கிவிட்டு, இவனுகளை நான் பார்த்துக் கொள்கி றேன் என்று மக்களிடம் கூறிவிட்டுக் காரேறிப் போய்விடுவார்.

இந்தப் போக்கைக் கண்டித்து சுவர் விளம்பரம் செய்ய எண்ணி, நாங்கள் இவ்வாறு சுவரில் எழுதினோம்…..
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு
” எனக்கு பக்தி இல்லை… இதனால் இங்கு யாருக்கு என்ன நட்டம் ஆகி விட்டது?
ஆனால், நான் ஒழுக்கமில்லாத வனாக இருந்தால் அது இந்தச் சமூகத் திற்கே பெருங்கேடல்லவா…? இளைஞர் களே, மாணவர்களே, பெண்களே சிந் திப்பீர்!”

பக்தி என்பது தனிச்சொத்து…

ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!
இந்த விளம்பரத்திற்குப் பெண்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. கார ணம், பக்தி வேசம் போட்டவர்களைப் பற்றி மக்களுக்கு அவ்வளவு நன்றாகத் தெரியும்….. அடுத்த சில மாதங்களில் பொங்கல் சோறும் புளியோதரையும் நின்று போனது…..
எங்கள் சுவரெழுத்து மட்டும் அதன்பின்னரும் தொடர்ந்தது…!

– காசு. நாகராசன்
இது ஒரு முகநூல் செய்தி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *