உதயநிதி கூறாததை சொல்லி அமைச்சரவையில் கட்டளையிடுவது மோடியின் பதவிக்கு அழகல்ல!

1 Min Read

கருநாடக முதலமைச்சர் சித்தராமையா

அரசியல்

பெங்களூரு, செப்.8- தமிழ்நாடு அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து கூறியதுபற்றி கருநாடக முதலமைச்சர் சித்தராமையா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:- 

சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தகுந்த பதிலடி வழங்குமாறு ஒன்றிய அமைச்சர்களுக்கு உத்தரவிட் டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த செயல் வன்முறையை தூண்டிவிடும் வகையில் உள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதனால் மோடி தனது கருத்தைத் திரும்பப்பெற வேண்டும். விடயங்கள் எதுவாக இருந் தாலும் சரி, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அதற்கு பதிலாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறுவது மக்களை தூண்டிவிடும் செயல் மட்டு மின்றி சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது ஆகும். இதை பிரதமர் செய்தாலும் தவறே. மோடி பா.ஜனதா தலைவர் மட்டுமல்ல, அரசியல் சாசன பதவியான பிரதமர் பதவியில் அமர்ந் திருப்பவர். அவரது நடை, பேச்சு, செயல் கண்ணியமாக, பொறுப்பானதாக இருக்க வேண்டும். அது தான் ராஜ தர்மம். தான் 140 கோடி மக்களுக்கு பிரதமர் என்பதை அவர் மறந்து விட்டதாக தெரிகிறது. பிரதமர் மோடி யின் வேண்டுகோளை ஏற்று பாரதீய ஜனதா தலைவர்கள் வன்முறைக்கு அழைப்பு விடுப்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. மோடியின் முந் தைய நடவடிக்கைகளை கவனித்தால், அவரது இன்றைய கருத்தில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. குஜராத் வன்முறை யின்போது முதலமைச்சராக இருந்த அவரது செயல்பாடுகள் குறித்து அப் போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அதிருப்தி தெரிவித்தார். ராஜதர்மத்தை பின்பற்றும்படி அவருக்கு அறிவுறுத் தினார். வாஜ்பாய் கூறிய அந்த அறி வுரையையே நான் அவருக்கு நினை வுபடுத்த விரும்புகிறேன். 

இவ்வாறு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *