சென்னை, மே 13- 11.05.2024 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “என்றும் தமிழர் தலைவர்” நூலின் திறனாய்வு நடைபெற்றது. கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.அருள்மொழி, திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி. லெனின் இருவரும் நூலைத் திறனாய்வு செய்தனர். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.
இரா. தமிழ்ச்செல்வன் : பெரியாரின் இன்றைய பொருத்தப் பாடு குறித்து உரையாற்றிய இரா. தமிழ்ச்செல்வன், சரியான தரு ணத்தில் நூல் வெளிவந்துள்ளதைத் தனது உரையில் குறிப்பிட்டார்.
கோவி. லெனின்: தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் விளைவித்திருக்கும் மாற் றத்தைக் கோடிட்டுக் காட்டிய லெனின், திராவிடர் கழகக் கொடி யின் உருவாக்கம் உள்ளிட்ட பல வரலாற்றுச் செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்.
வழக்குரைஞர் அருள்மொழி: “என்றும் தமிழர் தலைவர்” நூலின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேற்கோள்களுடன் உரையாற்றிய அருள்மொழி, நூலை உருவாக்கிய இந்து தமிழ்திசை குழுமத்தின் உழைப்பினைப் பாராட்டிப் பேசினார். பல்வேறு தளங்களில் செயல்படுபவர்களிடம் இருந்து கட்டுரைகள் பெறப்பட்டிருந்ததை வரவேற்று, வெளிமாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களின் பார்வையில் பெரியாரின் பங்களிப்பினைப் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட் டார். எழுத்தாளர் திருமாவேல னின் கட்டுரையின் வரிகளுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
நூலின் தொகுப்பாசிரியர் தோழர் ஆதி வள்ளியப்பன் நூலாக் கத்தின்போது கவனத்தில் கொண் டவை, நூலாக்கத்தில் அவருக்கு இருந்த சவால்கள் ஆகியவை குறித்து அவருடைய அனுபவங்க ளைப் பகிர்ந்து கொண்டார். பெரியாரின் இன்றைய தேவையைக் குறிப்பிட்டு வரவேற்புரை ஆற் றினார் தோழர் பிருந்தா சீனி வாசன். நிகழ்வின் தொடக்கத்தில் அன்னை நாகம்மையாரின் நினைவு நாளினை முன்னிட்டு, அவருடைய படத்தை வழக்கு ரைஞர் அருள்மொழி திறந்து வைத்தார். என்றும் தமிழர் தலை வர் நூலில் பங்களிப்பினைச் செய்த எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவ மைப்புக் கலைஞர்கள் அனை வருக்கும் புத்தகம் வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்டது.
நன்றியுரையை பகுத்தறிவாளர் கழக பொது செயலாளர் வெங்க டேசன் வழங் கினார். தோழர் வெற்றிச்செல்வன் இணைப்புரை ஆற்றினார்.