அண்ணாவின் ஆட்சி சாதனைகள்

1 Min Read

அரசியல்

ஆட்சிக் கட்டிலிலே அடியெடுத்து வைத்த அண்ணா அவர்கள் “சென்னை மாகாணம்” என்ற பெயரை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் ஏற்பட வழிவகுத்தார்.

தமிழக அரசின் சின்னத்தில் “சத்ய மேவ ஜெயதே” என்ற வாசகத்தை அழகிய தமிழில் “வாய்மையே வெல்லும்” என மாற்றி உத்தரவிட்டார்.

“செகரட்டேரியட்” என்று அழைக்கப்பட்டு வந்த அரசு அலுவலகம் “தலைமைச் செயலகம்” என்ற புதுப்பெயர் பெற்றது.

“ஆகாஷ்வாணி” என்ற சொல் மறைந்து “வானொலி” என்ற தமிழ் பதம் காற்றலைகளில் பவனி வந்தது.

ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம் அமல்படுத்தப்பட்டது.

சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது.

கலப்புத் திருமணம் செய்யும் தம்பதியர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

விதவைகளை மறுமணம் செய்து கொள்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தமிழகப் பேருந்து வழித்தடங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

அரசு நடவடிக்கைகள் ஆங்கிலம் – தமிழ் ஆகிய இரு மொழிகளின் வழி நடைபெற வழிமுறை வகுக்கப்பட்டது.

மே தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவித்தது.

கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டது.

ஏழைகளுக்கு பி.யு.சி வகுப்புவரை இலவசக் கல்வி.

குடிசைவாழ் மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள்.

விவசாயிகளுக்கு சில வரிகளிலிருந்து விலக்கு.

2ஆம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தியது.

இப்படி அவர் செய்த சாதனைகளில் இச்சாதனைகள் முக்கியமான வைகளாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *