முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் தூய்மை பணியாளருக்கு பேஸ் மேக்கர்

2 Min Read

சென்னை, மே 10 இதய நோயால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாள ருக்கு சென்னை போரூர் ராமச் சந்திரா மருத்துவமனையில் முதல் முறையாக முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீடு திட்டத் தில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட் டுள்ளது.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ராஜேஷ் (36). எழும்பூர் பகுதியில் வசிக் கிறார். இவர் கடந்த பல ஆண்டு களாக இதய பாதிப்பால் அவதிப் பட்டு வந்தார். பொதுவாக இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 60-_100 என்று இருக்கும் நிலையில், ராஜேஷுக்கு 200-க்குமேல் இருந்து வந்துள்ளது. இதனால், திடீரென பதற்றமாகி மயங்கிவிழுந்துவிடுவார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தும், குணமாகவில்லை.இதை யடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்தில் நிரந் தரமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த சிகிச்சைக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரைசெலவாகும் என்றும் கூறினர்.ஏழ்மையான குடும்பம் என்பதால், தங்களால் அவ்வளவு செலவிட முடியாது என்று அவரது குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத் துவ காப்பீடு திட்டத்தின்கீழ் ராஜேஷுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனையின் மூத்த இதயவியல் நிபுணர் தணிகாசலம் கூறும் போது,‘‘ராஜேஷின் நெஞ்சு பகுதியில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதயத் துடிப்பு அதிகரித்தால், பேஸ்மேக்கருக்கு தகவல் அனுப்பப் பட்டு, கம்பி வழியாக சிறிய மின்விசையை உருவாக்கி அந்த படபடப்பை அக்கருவி சரி செய்யும்’’ என்றார்.
இதயவியல் நிபுணர் பிரீத்தம் கூறியபோது, ‘‘ராஜேஷுக்கு அடிக்கடி படபடப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததால், மருத்துவ மனையில் மின் அதிர்ச்சி (ஷாக்) கொடுக்கப்பட்டு அவ்வப்போது சரி செய்துவந்துள்ளனர். 8 முறைக்கு மேல்இதுபோன்று ஏற் பட்டால், உயிரிழக்கும் அபாயம் உண்டு. எனவே, அய்சிடி பேஸ் மேக்கர் பொருத்த பரிந்துரை செய் தோம். வெளிநாட்டில் இருந்து அக்கருவி வரவழைக்கப்பட்டு, அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக தனியார் மருத் துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *