நூலகரிடம் விசாரித்த போது, நிறைய இளைஞர்கள், முதியோர், என்று அனைவரும் விரும்பிப் படிக்கக்கூடிய நாளிதழாக ‘விடுதலை’ இருக்கிறது, என்று சொன்னார், மேலும் அதில் இடம்பெற்றிருக்கக் கூடிய கருத்துகள், அதன் மீதான விவாதங்கள், பேச்சுகள், இவை தான் நூலகத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன, என்றும் சொன்னார்.
நான் நூலகத்தில் ‘விடுதலை’ வாசித்துக் கொண்டிருந்த போதும் கூட, ஒரு நண்பர் வந்து கேட்டார், ‘‘என்ன தம்பி ‘விடுதலை’ படிச்சாச்சா,” என்று.
‘‘படிச்சாச்சு அண்ணா” என்று இன்னொருவர் சொன்னார்.
இன்றைய சுவாரசிய நிகழ்வு இது.
அன்புடன்….
வெங்கடேசன்
திராவிட மாணவர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்
(அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்)
பெரம்பலூர் மாவட்ட மாணவர் கழகத் தோழர் மானமிகு வெங்கடேசன் எழுதியுள்ள இப்படி ஒரு தகவல் கண்டு மனம் பூரிக்கிறோம்.
‘விடுதலை’யைப் படித்து இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் உண்டு. இன்றும்கூட 90 வயது கடந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் ‘விடுதலை’யைப் படிக்காவிட்டால், அன்று எதையோ இழந்ததுபோல் ஏங்கும் நிலை உண்டு.
நமது முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் சொல்வதுண்டு, ‘‘நான் முதலில் படிக்கும் ஏடு ‘விடுதலை”’ என்று.
‘விடுதலை’ ஏடு பொழுதுபோக்கு ஏடல்ல – சினிமா, ராசி பலன் எழுதி பணம் பறிக்கும் ஏடல்ல – மாறாக, மக்களின் அறிவைக் குப்பைத் தொட்டியாக்கும் மூடக் குவியல்களைக் குத்திக் கிழித்து பகுத்தறிவு வெளிச்சத்தைப் பரப்பும் – பகுத்தறிவுப் பலகவன் தந்தை பெரியார் நம்மிடம் விட்டுச் சென்ற பே(£)ராயுதம்!
‘‘தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை”’ என்றார் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார்!
மனுதர்மம் மீண்டும் மார் தட்டுகிறது. சமூகநீதிக்குச் சாவு மணி அடிக்க சங்கிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.
இந்த மனித குல விரோத சக்திகளுக்குச் சாவு குழி பறிக்க சண்ட மாருதமாகப் பவனி வரும் ‘விடுதலை’க்குச் சந்தாக்களை சேர்க்க தேனீக்களாகப் பறந்து பறந்து பணியாற்றுவீர் தோழர்களே!
மே 20, நமது தலைவர் நமக்கு வைத்த கெடு!
நினைவிருக்கட்டும், ‘விடுதலை’ சந்தா சேர்க்க விரைவீர்! விரைவீர்!!