சென்னை, மே 7– ‘கோடை வெப்பத்தால் குடிநீர் தேவை உச்சத்தை எட்டி யுள்ளது. இருந்தாலும் ஏரிகளில் இருக்கும் நீர் மூலம் மாநிலம் முழுவதும் ஜூன் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க முடி யும்’ என்று அதிகாரிகள் கூறினர்.
தமிழ்நாட்டில் கடுமையான வெயில் தொடங்கிய நிலையில் குடிநீர் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. மருத்துவர்களும் கோடை வெப்பத் தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வழக்கத்தைவிட கூடு தலாக 2 முதல் 3 லிட்டர் வரை குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும் என்கின்றனர்.
ஒரு டி.எம்.சி.
குடிநீர் தேவை
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும் போது, ‘சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இதில் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் விநி யோகிக்க சராசரியாக மாதம் ஒரு டி.எம்.சி. குடிநீர் தேவைப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 85 கோடி லிட்டர் அதிகபட்சமாக ‘தினசரி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதே ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 100 முதல் 107.2 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு இணைப்புகளை பெற்றவர்களும் பயனடைந்து வருகின்றனர்.
மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள்
கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம் பாக்கம் மற்றும் சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர்சுத்திகரிக்கப்பட்டு 111 மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் 6 டி.எம்.சி. நீர் மூலம் அக்டோபர் மாதம் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியும். இதுதவிர மீஞ்சூர் 100 மில் லியன் லிட்டர், நெம்மேலி 110, நெம்மேலியில் உள்ள மற் றொரு நிலையத்தில் இருந்து 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது’ என்றனர்.
ஜூன் வரை
விநியோகம்
மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்’ கூறும் போது ‘தமிழ்நாட்டில் 13 மாநகராட்சிகள், 70 நகராட் சிகள், 323 பேரூராட்சிகள், 51 ஆயிரத்து 48 ஊரக குடியிருப் புகளில் வசிக்கும் 5.02 கோடி மக்களுக்கும் மற்றும் 576 தொழிற்சாலைகள், நிறுவனங் களுக்கும் தினசரி 228.6 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக் கப்படுகிறது கடந்த ஆண்டு 194.9 கோடி லிட்டர் குடிநீர் தேவை இருந்தது. கடந்த ஆண்டை விட தற்போது 33.7 கோடி லிட்டர் தேவை அதிக ரித்துள்ளது. காவிரி ஆற்றைநீர் ஆதாரமாக கொண்ட 281 கூட்டு குடிநீர் திட்டங்களில் போதிய அளவு குடிநீர் கையி குப்பு இருப்பதால் இதன் மூலம் பயன்பெறும் பயனா ளிகளுக்கு ஜூன் வரை குடிநீர் வழங்க முடியும். தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் குடிநீர் தேவையும் உச்சத்தை எட்டி உள்ளது’ என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு ஏரிகளில் நீர் உள்ளது.
அதேநேரம், பூண்டி ஏரியில் உள்ள 14 மதகுகள் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறிப் பாக மதகுகள் திறந்து, மூடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக ‘ரப்பர் புஷ்’கள் மாற்றப்படுகிறது.
அத்துடன் பழுதடைந்த 2 மதகுகள் புதிதாக மாற்றப்பட உள்ளது.
மொத்தம் உள்ள 140 அடி யில் தற்போது 129 அடி நீர் இருக்கிறது. 125 அடியாக குறைந்தால் இம்மாத இறுதிக்குள் 2 புதிய மதகுகள் பொருத்தப்படும்’ என்றனர்.