தமிழ்நாட்டில் 39 வாக்கு எண்ணும் மய்யங்களிலும் கேமராக்கள் தடையின்றி வேலை செய்ய சிறப்பு ஏற்பாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

2 Min Read

சென்னை, மே 7 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று (6.5.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் அனுமதிக்கப்படக்கூடிய நபர்கள் எண்ணிக்கை, வாக்கு எண்ணிக் கையில் ஈடுபட உள்ள பணியா ளர்களுக்கான பயிற்சிகள் உள் ளிட்ட முன்னேற்பாடுகள் தொடர் பான பணிகள் 20ஆம் தேதிக்கு பிறகு மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் 39 மய்யங்களில் 24 மணி நேரமும் துணை ராணுவம், சிறப்பு காவல் துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண் காணிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், ஊட்டி, தென்காசி உள்ளிட்ட சில வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுது தொடர்பாக புகார்கள் வந்தது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக் கும் பல்வேறு உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், மின்வாரிய அதி காரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் அதிக வெப்பத்தாலும், மின் இணைப்பு பிரச்னைகளாலும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாக கூடாது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

மின்சாரம் தடை பட்டாலும், வாக்கு எண்ணும் மய்யங்களில் உள்ள கேமராக்கள் வேலை செய்யும் வகையில் ஜெனரேட்டர் கள் வைக்கவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத் தேர் தல் தொடர்பாக தேர்தல் ஆணை யத்தில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் சான்றிதழ் வழங் கும் பணியில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது என்று அதிகாரி களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளார்கள். அந்த விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *