தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருத்தங்கல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர் திருத்தங்கல் தந்தை பெரியார் சிலை அருகில், 05.05.2024 ஞாயிறு இரவு 7 மணிக்கு சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழாப் பரப்புரைக் கூட்டம் தொடங்கியது.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிவகாசி மாநகர் பகுதிச் செய லாளர் மா.நல்லவன் தலைமையில், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் முன்னிலையில், சிவகாசி மாநகரச் செயலாளர் து.நரசிம்மராஜ் வரவேற்புரையாற்றினார். இராசை மாவட்டத் தலைவர் பூ.சிவகுமார் மந்திரமல்ல! தந்திரமே! செயல் விளக்க நிகழ்ச்சியினை பகுதி மக்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடத்தினார்.
மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி தொடக்கவுரை யாற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு சிறப்புரையாற்றினார். நிறைவாக கழகச் சொற் பொழிவாளர் பால் இராசேந்திரம் நிறைவுரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முருகன், விருதுநகர் மாவட்டக் காப்பாளர் அ.தங்கசாமி, மாவட்ட அமைப்பாளர் வெ.முரளி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர், இராசை நகரச் செயலாளர் இரா.பாண்டிமுருகன், அருப்புக் கோட்டை ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா, நகரச் செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர், சிவகாசி மாநகர் பகுதிச் செயலாளர் மு.ஜீவாமுனிஸ்வரன் மற்றும் தோழர்கள், தோழமை இயக்க நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந.ஆசைத் தம்பி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
ஆலங்குளம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரை தெருமுனைக்கூட்டம் 5.5.2024 அன்று மாலை ஆறுமணிக்கு நகரத்தலைவர் பெரியார் குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலங்குளம் ஆறுமுக பாண்டியன் வரவேற்று உரை யாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.
பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் அ.எழில் வாணன் பங்கேற்று அறிவாசான் தந்தைபெரியார் சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவித்ததின் விளைவாக ஏற் பட்டுள்ள சமூக மாற்றத்தையும், குடிஅரசு ஏட்டினை பாது காத்து தந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் உரையாற்றினார்.
நிறைவாக கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன் சுயமரி யாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த பார்ப்பன ஆதிக்கத்தையும், அதனை தகர்த்தெறிந்து தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினையும், தொடர்ந்து ஆசிரியர் அவர்கள் ஆற்றிவரும் அளப்பரிய தொண்டினையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
இறுதியில் நகரசெயலாளர் ஞானராஜ் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
சேலம் – கருங்கல்பட்டி
சேலம் – கருங்கல்பட்டியில் சுயமரியாதை இயக்க நூற் றாண்டு குடி அரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 5.5.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
மாநகர் செயலாளர் சி. பூபதி தலைமை வகித்தார். மாநகர் தலைவர் அரங்க இளவரசன் வரவேற்புரை ஆற்றினார்.
கழக காப்பாளர் கி.ஜவகர் மாவட்ட தலைவர் அ.ச.இளவழ கன் செயலாளர் வைரம், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் வீரமணி இராசு, தாதகாப்பட்டி பகுதி தலைவர் இரா. வீரமணி, 55ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினர் அ.ச.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவர் ஜி.கே. சுபாசு, அம்மாபேட்டை பகுதி தலைவர் க. குமாரதாசன், சூரமங்கலம் பகுதி செயலாளர் போலீஸ் கு.ராஜீ, தலைமை கழக அமைப்பாளர் கா.நா. பாலு, மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், செயலாளர் வைரம் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள்.
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான இரா.இரா ஜேந்திரன், கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
தாதகாபட்டி பகுதி செயலாளர் ச.வெ. பூபதி நன்றி கூறினார்.
மேற்படி கூட்டத்திற்கு சேலம், நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக தோழர், தோழியர்களும் திரளான பொது மக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
கூட்டம் பொதுமக்களின் பேராதரவோடு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம்
திண்டிவனம் கழக மாவட்டம் சார்பாக சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. சுயமரியாதை இயக்கம் மற்றும் குடியரசு இதழ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நூறு பரப்புரை கூட்டங் களை நடத்தவேண்டும் எனும் தலைமைக் கழகத்தின் ஆணைக்கு இணங்க திண்டிவனம் கழக மாவட்டத்திற் குட்பட்ட மயிலம் ஒன்றிய கழகத்தின் சார்பாக கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் 4.5.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு மயிலம் ஒன்றிய செயலாளர் ச.அன்புக்கரசன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பி பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார்
நிகழ்ச்சியில் திண்டிவனம் கழக மாவட்ட செயலாளர் பரந்தாமன் மற்றும் திண்டிவனம் மாவட்ட கழக தலைவர் இர.அன்பழகன், விழுப்புரம் மாவட்ட கழக அமைப்பாளர் கோபண்ணா, திண்டிவனம் நகர கழக அமைப்பாளர் வில்லவன் கோதை மற்றும் மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் திண்டிவனம் மாவட்ட தலைவர் திலீபன் ஆகியோர் உரையாற்றினர்.
அவர்களைத் தொடர்ந்து, தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி தொடக்க உரையாற்றினார்.
மிகச்சிறப்பாக மயிலம் மத்திய ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் கோ. செழியன், திமுக மாநில தீர்மானக் குழுத் துணைத் தலைவர் டாக்டர் ஆர். மாசிலாமணி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இரா சேது நாதன் ஆகியோர் உரையாற்றினர்.
அவர்களைத் தொடர்ந்து மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை மிகச்சிறந்ததொரு உரையாற்றினார்.
சுயமரியாதை இயக்கம் தோன்றியதைப் பற்றியும் அது தோன்ற காரணமாக நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றியும் இந்த சுயமரியாதை இயக்கம் இந்த தமிழ்நாட்டிற்கும் திராவிட இனத்திற்கும் ஆற்றிய தொண்டு பணிகளைப் பற்றியும், இன் றைக்கும் சுயமரியாதை இயக்கத்தின் தேவை எந்த அளவிற்கு இருக்கிறது, அதை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலை மையிலான திராவிட மாடல் ஆட்சி எந்த அளவிற்கு சுயமரி யாதை இயக்க கொள்கைகளில் நடைமுறைப்படுத்துகிறது என்பதைப் பற்றியே எல்லாம் மிகச்சிறந்ததொரு உரை யாற்றினார்.
இறுதியாக மயிலம் ஒன்றிய மகளிரணி தலைவர் லட்சுமி பாவேந்தன் நன்றி கூறினார்
நிகழ்ச்சியில் திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நவா.ஏழுமலை, நகர செயலாளர் பன்னீர்செல்வம், இளைஞர் அணி செந்தில், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை. திருநாவுக்கரசு, விழுப்புரம் நகர கழக செயலாளர் பழனிவேல், புதுவை மாநில பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி, புதுவை மாநில இளைஞரணி செயலாளர் தி. ராசா, மயிலம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி அன்புக்கரசன் மற்றும் மயிலம் ஒன்றிய மாணவர் கழகம் அ.க. தமிழமுதன் மற்றும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழின் நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் 5.5.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காக்கங்கரை பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
காக்கங்கரை கிளைக் கழக தலைவர் சி. சந்தோஷ் குமார் வரவேற்றார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிற்றரசன் இணைப்புரை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே. அன்பு தலைமை வகித்தார்.
மாநில மகளிரணி பொருளாளர் எ. அகிலா, மாவட்ட துணைத் தலைவர் அசோகன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம். என். அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் வி. ஜி.இளங்கோ, மாவட்ட காப்பாளர் மா.சி. பாலன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச் செல்வன், நகர தலைவர் காளிதாஸ், ப.குத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் கோ. திருப்பதி, சுந்தரம்பள்ளி ஒன்றிய தலைவர் கோ. சங்கர், செயலாளர் ஏ. டி. சித்தார்த்தன், மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் நா. சுப்புலட்சுமி, கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். சுரேஷ் குமார், சோலையார் பேட்டை அமைப்பாளர் இராஜேந்திரன், சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன், தி. மு. க கழக செயற் குழு உறுப்பினர் ஜி.ராஜமாணிக்கம் கருத்துரை வழங்கினர்.
கழக பேச்சாளர் கோவை க. வீரமணி, தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற கழக தோழர்கள் ரா. நாக ராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்), தே. பழனிசாமி (மாவட்ட செயலாளர் இளைஞரணி), ம.சங்கர் (மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி), ப. அஜித் (மாவட்ட துணைச் செயலாளர் இளைஞரணி), த,சாந்தி (மாவட்ட தலைவர் மகளிரணி) இ. வெண்ணிலா (மாவட்ட செயலாளர் மகளிரணி), அ. விஜயா (மாவட்ட அமைப்பாளர் மகளிரணி), அ. தமிழ்ச் செல்வன் (மாவட்ட செயலாளர் மாணவர் கழகம்), பாலாஜி (மாவட்ட அமைப்பாளர் மாணவர் கழகம்), ப. நாத்திகன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.கற்பகவள்ளி (மாவட்ட தலைவர் மகளிர் பாசறை), சி.சபரிதா (மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை), தி. நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, குமரவேல் மாவட்ட செயலாளர் ப.க.ஆசிரியரணி, அ. குமணன் மாவட்ட அமைப்பாளர் ப.க.ஆசிரியரணி, ஜெ. ரவி. மாவட்ட அமைப்பாளர் ப. க.ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி, எம். ஞானப்பிரகாசம் மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம், குமரவேல் மாவட்டச் செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், பெருமாள் சாமி மாவட்ட துணைச்செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், ஆ. ப. செல்வராஜ் மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், சிவக்குமார் நகரதலைவர் சோலையார் பேட்டை, வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார் பேட்டை, லட்சுமணன் சோலையார்பேட்டை பொறுப்பாளர், நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச் சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு. வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே. வெங்கடேசன் மாதனூர் ஒன்றிய செயலாளர், க. முருகன் நகர அமைப்பாளர், ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜ சேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.
சுயமரியாதை இயக்கம் மற்றும் குடி அரசு இதழ் நூற்றாண்டு விழா மற்றும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்த கழக தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தேன்? என்ற புத்தகத்தை( சுமார் 50) மாவட்ட தலைவர் கே.,சி.எழிலரசன் மற்றும் மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன் ஆகியோர் வழங்கினார்.
பரப்புரை கூட்டம் இரவு 9.30 மணி நீடித்தது. ஆனாலும் அதுவரை கழக தோழர்களும், பொதுமக்களும் ஊமை ஜெயராமன் , க. வீரமணி ஆகியோர் தந்தை பெரியார் அவர் கள் ஏன் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார் என் பதையும், இதனால் இந்த சமூகத்தில் ஏற்ப்பட்ட மாற்றங்கள் என்ன? இன்னும் சமூகத்திற்கு ஆற்றும் வேண்டிய பணிகள் என்ன? என்பதை விளக்கி பேசியதை உற்றுக் கவனித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
சுயமரியாதை நூற்றாண்டு மற்றும் குடி அரசு இதழ் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது மட்டு மல்லாது, குடி அரசு இதழின் நீட்சியான விடுதலை நாளித ழுக்கு சந்தாக்களை வழங்குவோம் என்று உறுதி அளித்து, அந்த மேடையிலே கந்திலி ஒன்றிய தலைவர் ரா. நாகராசன் ஒர் ஆண்டு சந்தாக்கான தொகையை வழங்கினார்.
சுயமரியாதை இயக்கம் அந்த நீட்சியான திராவிடர் கழகமும் என்றென்றும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையான மானுட சமுத்துவத்தை நோக்கி பயணிக்கும் .
அந்த பயணத்திற்கு ஆசிரியர் அவர்களோடு என்றென்றும் கழக தோழர்கள் எவ்வித தொய்வில்லாமல் பயணிப்பதற்கு தயார்! என்ற நிலையில் இருந்தது இந்த பரப்புரை கூட்டம்.
மனித குல முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் தவிடு பொடியாக்கி நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற ஒற்றை புள்ளியில் இந்த மானுட உலகம் ஒருங்கிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும் இருந்தது இந்த கூட்டம் என்றால் அது மிகையல்ல?
பெரியகண்ணாபட்டி கழக பொறுப்பாளர் க. தசரதன் நன்றி கூறினார்.
கூட்டம் முடிந்தவுடன், கூட்டத்தில் பங்கேற்று அனைத்து தோழர்களுக்கும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வே. அன்பு இரவு சிற்றுண்டி ஏற்பாடு செய்து வழங்கினார்.