அறந்தாங்கி, மே 6- 4.05.2024 மாலை 5.30 மணிக்கு அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் க.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கறம்பக் குடி க.முத்து, மாவட்ட ப.க.செயலாளர் க.வீரையா முன்னிலை வகித்தார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டி யன் கூட்டத்தில் சுயமரி யாதை இயக்க நூற் றாண்டு விழா மற்றும் குடிஅரசு நூற்றாண்டு விழா கூட்டத்தை நடத்து வதற்கு ஏற்பாடுகளையும் மற்றும் தந்தை பெரியார் அவர்களால் தொடங் கப்பட்ட உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலையின் பயன்கள் அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பின் பயனாக நாள்தோறும் நமக்கு கிடைக்கின்ற விடு தலை பற்றியும். ஏன் நாம் விடுதலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண் டிய சூழலையும் விலக்கி உரையாற்றினார்.
ரெ.மணிமாறன் மாவட்ட மாணவர் கழக தலைவர், திருவரங்குளம் ஒன்றிய தலைவர் மு. தேவேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கியது டன் ஒவ்வொருவரும் அய்ந்து அல்லது பத்து சந்தாக்கள் திரட்டித்தர உறுதி கூறி சந்தா புத்தகங் களை பெற்றனர்.