நெல்லை, மே 6- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 4. 5 .2024 மாலை ஆறு மணிக்கு பாளையங்கோட்டை தொ.ப. தமிழ் அகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழக செய லாளர் இரா.வேல்முருகன் தலைமை வகித்தார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேருழைப்பால் தமிழ் நாட்டை தாண்டி இந் தியா முழுமையும் ஏற் படப்போகும் மாற்றத் தையும், விடுதலைக்கு சந் தாக்கள் சேர்த்தளிக்க வேண்டிய அவசியத்தை யும் எடுத்துக் கூறி தொடக்கவுரையாற்றினார்
மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தலைவர் செ.சந்திரசேகர் பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற ஆய்வுக் குழுஉறுப்பினர் சு .ப.நயினார், மாவட்ட ப.க. செயற்குழு உறுப்பி னர் கனகதாமஸ், பேராசிரியர் மாணிக்கம், சு.ப.சோபசுந்தரம், வழக்குரைஞர் இரமேசு, தச்சை பகுதி செயலாளர் மாரி.கணேசு, மாநகர ப.க. தலைவர் முரசொலி முருகன், மாநகர ப.க. துணை தலைவர் சந்திப்பு நடராஜன், மாநகரப.க. துணைச் செயலாளர் எம்.ஜி.ஏ.ஜார்ஜ் சேரன் மகாதேவி ஒன்றியத் தலை வர் கோ.செல்வசந்திர சேகர், வீரவநல்லூர் நகர தலைவர் மா.கருணாநிதி, மாநகர தி.க. செயலாளர் ம.வெயிலு முத்து, கழக பேச்சாளர் இராம .அன் பழகன் ஆகியோர் கருத் துரை வழங்கியதுடன் ஒவ்வொருவரும் அய்ந்து சந்தாக்கள் சேர்த்து தரு வதாக அறிவித்து சந்தா புத்தகங்களை பெற்றனர்.
நிறைவாக பேசிய மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் கட்டளைப்படி 100 சந்தாக்களை சேர்த் தளிப்போம் என்றதுடன், தனது சார்பில் வாழ்நாள் சந்தாக்கள் வழங்குகிறேன் என பெருமையுடன்தெரிவித்தனர்.