காரைக்குடி, மே 6 – காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.5.2024 ஞாயிறு மாலை 6.00 மணி அளவில், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில், மாவட்டத் தலைவர் ம .கு.வைகறை தலைமையில் நடைபெற்றது.
மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் நோக்கம் குறித்து திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் கருத்துரை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட ப.க. தலைவர் சு.முழுமதி, கழக சொற்பொழிவாளர் தி.என்னா ரெசு பிராட்லா, பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சு கண்மணி, காரைக்குடி நகர அமைப்பாளர் ஆ.பால்கி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேவகோட்டை சீரிய பகுத்தறிவாளர் மு.செல் லத்துரை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும், சுயமரியாதை இயக் கம் மற்றும் குடிஅரசு நூற் றாண்டு விழா பரப்புரைக் கூட் டங்களை அனைத்து ஒன்றியங் களிலும் நடத்துவதெனவும், திராவிட இனத்தின் விடிவெள் ளியாக விளங்கும் விடுதலை நாளேட்டுக்கு 100 சந்தாக்களை மாவட்டத் தோழர்கள் அனை வரின் ஒத்துழைப்போடு திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களிடம் வழங் குவதெனவும் தீர்மானிக்கப் பட்டது.