‘தினத்தந்தி’ மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதன் அவர்கள் நேற்று (3.5.2024) மறைந்தார். அவரது உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் விடுத்த இரங்கல் அறிக்கையை கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர். உடன்: சோ. சுரேஷ், அரும்பாக்கம் சா.தாமோதரன், க. கலைமணி மற்றும் தோழர்கள்.